மட்டப்பள்ளி (பஞ்சநரசிம்மஷேத்ரம்) (தரிசனநாள்-9.12.2025)
அமைவிடம்
தெலுங்கானாமாநிலம் சூர்யபெட் மாவட்டத்;தில் உள்ள மட்டப்பளி (எ) மட்டம்பள்ளி என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த யோக லெட்மி நரசிம்மர் கோவில்.
கோவில் வரலாறு
கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோவில் 11ஆம் நூற்றாண்டில், “அனுமலாமாச்சி ரெட்டி” என்ற அரசனின் கனவில் இந்த நரசிம்மர் தோன்றி சுயம்புவாக உள்ள இந்த நரசிம்மருக்கு கோவில் எழுப்ப பணித்தார் இறைவன். "பரத்வாஜமுனிவர்”; வழிபட்ட தலம். இத்தலத்தில், ராஜலெஷ்மி தாயார் மற்றும் செஞ்சுலெஷ்மி தாயார் என்று இரண்டு தாயார்கள் அருள்பாலிக்கின்றனர். அகோபில மடம் இந்த கோவிலுக்கு அதிக உதவி செய்கிறது.
சுயம்பு மூர்தியான இந்த லெஷ்மி நரசிம்மர், மலை குகையில் அமைந்துள்ளார். இந்த குகையிலிருந்து கிருஷ்ணா நதிக்கு செல்ல பாதையுள்ளது. இன்றளவும் அதிகாலை பிரம்ம முகூர்தத்தில் தேவர்கள் மற்றும் முனிவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்தவதாக கருதப்படுகிறது. அதன் காரணமாக காலை ஐந்தரை மணிக்குமேல்தான், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த குகைகுள் குறைந்தது பத்து நபர்களுக்கு மட்டுமே இடமிருக்கும். அதனால் பக்தர்கள் கொஞ்சம் கொஞ்சமாகதான் அனுஅதிக்கப்படுகின்றனர். இதனால் நரசிம்மரை மிக அருகில் தரிசனம் செய்ய முடிகிறது. எங்களின் திருமஞ்சன தரிசனம் மிக ஏகாந்தமாக அமைந்தது.
எங்கள் அனுபவம்
நாங்கள் இந்த மடட்ப்பள்ளி கோவில் மடத்திலுள்ள அறையில் தங்கினோம். வசதி மற்றும் சுகாதாரம் மிக குறைவாகவேயிருந்தது. பெங்களுர் குளிர் காரணமாக சற்று உடலநலக்குறைவு எங்கள் இருவருக்குமிருந்தது. (வெண்ணீர் சாதன வசதியில்லை) நாங்கள் அதை பொருட்படுத்தால் குளிர்;ந்த நீரில் குளித்துவிட்டு திருமஞ்சனதரிசனத்திறக்கு சென்றது கடினமாகயிருந்தது. இக்கோவில் பராமரிப்பு மிக மோசமான நிலையிலிருந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கான கோவில்கள் பராமரிப்பு திருப்திகரமாகயில்லை.
பயண அனுபவம்.
நாங்கள் கடந்த ஆண்டு 2024 கார்திகை மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கார்திகை மாதம் சிறப்பாக நரசிம்மர் தலங்கள் செல்ல திட்டமிட்டிருந்தோம். (“கார்திகை மாத நரசிம்ம தரிசனம்” என்று பிளாக்; எழுதியுள்ளேன்)கார்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்திருப்பார்; என்றும் அந்த மாதத்தில் நரசிம்மர் தரிசனம் சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டுஇ மங்களகிரிஇ வேதாத்தரிஇ மட்டப்பள்ளிஇ வாடப்பள்ளிஇ அக்ரிப்பள்ளி (கேதவரம்) என்ற ஐந்து நரசிம்ம கோவில்களை தரிசனம் செய்யஇ பரகாலயாத்ரா என்ற யாத்திரை குழுவுடன் விஜயவாடாவில் இணைய திட்டமிட்டிருந்தோம். அவர்ளின் திட்டத்தில் கனகதுர்காவும்இ பத்ராச்சல ராமரும் கூடுதலாக திட்டமிட்டிருந்ததுஇ எங்களுக்கு மகிழ்சியை அளித்தது. இந்த யாத்திரை 8,9,10 ஆம் தேதியென்று மூன்று நாட்களுக்கு திட்டமிட்டிருந்தனர். என்னுடைய கணவரின் நண்பர் எங்களை விஜயவாடாவிற்;கு அழைத்ததின் அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் 5,6,7, ஆம் தேதி என்று மூன்று நாட்களும் சில ஆலயங்களை தரிசனம் செய்யதோம்.
No comments:
Post a Comment