அருள்மிகு அரங்க ராமானுஜ பஜனை மடம்.
(தரிசனம் -30.12.2025)
அமைவிடம்.
புதுச்சேரியில், செயின்தெரஸா வீதியில் அமைந்துள்ளது இந்த மடம். இங்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஆனந்த ரங்கநாதர் சயனகோலத்தில் அருள்பாலிக்கிறார்.
30ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று நாங்கள் பாண்டிச்சேரியிலிருந்ததால், ஏகாதசி சிறப்பு தரிசனமாக இந்த ஆலயத்திற்கு சென்றோம்.
இந்த ஆலயதரிசனத்துடன் என் நினைவலைகளை பகிர்வதற்காகவே இந்த பிளாக்.
மடம் பற்றிய அடிப்படை செய்தி.
ஸ்ரீமான் ஜெகதேவ் பார்தசாரதி நாயுடு, ஸ்ரீமான் ஜெகதேவ் கிருஷ்ணசாமி நாயுடு என்பவர்களால் இந்த இடம் சத்சங்கம் நடத்துவதற்காக 1879 ஆம் ஆண்டு தர்மமாக அர்பணிக்கப்பட்டது.
நான் மூன் என்ற தனியார் தொலைகாட்சியல் செய்திவாசிப்பவராக பணியாற்றிய சமயம் இந்த தெருவழியாக ஓராண்டுகாலத்திறக்கு மேல் சென்றிருப்பேன். இந்த காலகட்டத்தில் சரியான பராமரிப்புயின்றிருந்தது. இந்த பஜனை மடத்தை மீண்டும் புனரமைத்து 2017 ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் செய்தனர். பல நல்லவர்களுக்கிடையில் எனது தாஞ்சாவூர் ஓவிய ஆசிரியரின் பங்களிப்புமிருந்தது. நான் வெளியிட்டுள்ள கல்வெட்டுபுகைப்படத்தில், அவரின் பெயர் தேவநாத ராமானுஜதாசர் இவர்களின் பெயருமிருக்கும்.
இவரின் உதவியால், நான் 2018 முதல் 21 வரை நான்கு ஆண்டுகள் வைகுண்ட ஏகாதசியன்று தொடர் சொற்பொழி செய்யும் வாயப்பு கிடைத்தது. இதுமட்டுமல்லாமல், மாத ஏகாதசிநாட்கள் தோறும் மாணவர்களுக்கு கிருஷ்ணரின் கதைகளைகூறும் பாக்கியமும் பெற்றேன். கூடாரவல்லி போன்ற வைணவ சிறப்பு நாட்களிலும் என்னுடைய ஆன்மீக பங்களிப்பிருந்தது. என்னிடம் உள்ள சில புகைப்படங்களை பகிர்கிறேன். இதன் நினைவாகவே நான் 30.12.2025 அன்று சிறப்புவழிபாட்டிற்காக இந்த ஆனந்த ராங்கநாதரை தரிசனம் செய்தேன். காலை ஏழு மணிக்கு சென்றதால் நான் என் குருநாதரை சந்திக்க முடியலை. தொலைபேசியில் தொடர்பு கொண்டதில், தஞ்சாவுர்ூகிளம்பிவிட்டதாக தெரிவித்தார்.

No comments:
Post a Comment