துவாரகா திருமலை (தரிசனநாள்-6.12.2025)நாள் - இரண்டு
அமைவிடம்
எளுரு மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாள் கோவில். இந்த கோவில் சின்ன திருப்பதி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
பெயர்காரணம்
இரண்டு வெங்கடேஸ்வரர் சிலை இக்கோவில் மூலஸ்தானத்தில் அமைந்துள்ளதால் துவாரகா (துவா-இரண்டு) திருமலை என்ற அழைக்கப்படுகிறது. ஒன்று சுயம்புமூர்த்தி. மற்றொன்று உருவாக்கப்பட்ட சிலை. துவாரகா, முனிவரின் கடும் தவத்தால் இந்த இறைவன் நமக்கு கிடைத்தார். ஒரு ஆண்டிற்கு 50 லட்சம் பக்தர்கள் வருகைபுரிகிறார்கள். விசேஷநாட்களில் ஒருநாளைக்கு 40,000பக்தர்களுக்குமேல், தரிசனம் செய்கிறார்கள் என்று இக்கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது.
வரலாறு
இக்கோவிலின் விமானம், மண்டபம், கோபுரம் இவைகள், தர்மஅப்பாராவ் என்பவரால் கட்டப்பட்டது. இவரே இந்த பகுதியை ஆட்சிபுரிந்து வந்தார். நகைகளும், வெள்ளி கவசங்களும் ராணி சின்னம்மராவ் அவர்களால் இக்கோவிலுக்கு அர்பணிக்கப்பட்டது. 1877 முதல்1902 வரை கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மைலாவரம் ராணி இங்கு ஆட்சிபுரிந்துவந்தார்.
திருப்பதியின் நகல் போன்ற கோவிலாகவேயிருந்தது.
பிரமராம்பா மல்லிகார்ஜுனஸ்வாமி
இக்கோவில் அருகிலுள்ள மல்லிகார்ஜுனஸ்வாமி சிவன் கோவிலையும் தரிசனம் செய்தோம்.
இங்கிருந்து மசூலிப்பட்டிணம் செல்ல திட்டமிட்டிருந்தோம். நாங்கள் வாடடைக்கு அமர்த்தியிருந்த கார் பழுது காரணமாக வீடுதிரும்பினோம்.
பயண அனுபவம்.
நாங்கள் கடந்த ஆண்டு 2024 கார்திகை மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கார்திகை மாதம் சிறப்பாக நரசிம்மர் தலங்கள் செல்ல திட்டமிட்டிருந்தோம். கார்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்திருப்பார்; என்றும் அந்த மாதத்தில் நரசிம்மர் தரிசனம் சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு, மங்களகிரி, வேதாத்தரி, மட்டப்பள்ளி, வாடப்பள்ளி, அக்ரிப்பள்ளி என்ற ஐந்து நரசிம்ம கோவில்களை தரிசனம் செய்ய, பரகாலயாத்ரா என்ற யாத்திரை குழுவுடன் விஜயவாடாவில் இணைய திட்டமிட்டிருந்தோம். அவர்களின் திட்டத்தில் கனகதுர்காவும், பத்ராச்சல ராமரும் கூடுதலாக திட்டமிட்டிருந்தது, எங்களுக்கு மகிழ்சியை அளித்தது. இந்த யாத்திரை 8,9,10ஆம் தேதி என்று மூன்று நாட்களுக்கு திட்டமிட்டிருந்தனர். என்னுடைய கணவரின் நண்பர் எங்களை விஜயவாடாவிற்;கு அழைத்ததின் அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் 5,6,7,ஆம் தேதி என்று மூன்று நாட்களும் சில இடங்களை தரிசனம் செய்யதோம்.











No comments:
Post a Comment