திருபுட்குழி விஜயராகவபெருமாள்.

 திருபுட்குழி விஜயராகவபெருமாள். (தரிசனநாள் - 27.11.2025)

அமைவிடம்

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் - வேலூர் சாலையில் அமைந்துள்ளது. சென்னை – பெங்களுர் செல்லும்பொழுது இந்த வழியாகதான் செல்ல வேண்டும். தாமல் என்ற ஊரும் இவ்வழியில்தான் உள்ளது.

பயண அனுபவம்

நாங்கள் 27 ஆம் தேதி சென்னையிலிருந்து பெங்களுர் பயணிக்கும் சமயம் இந்த கோவிலை வழிபட்டோம். இந்த வழிதிடத்தில் உள்ள நான்கு கோவில்களை தரிசனம் செய்ய வேண்டும் என்பது எங்களின் அவா. திருபுட்குழி விஜயராகவ பெருமாள், மணிகண்டீஸ்வரர் என்ற சிவன் கோவில், தாமல் தாமோதர பெருமாள், வராகீஸ்வரர் என்ற சிவன் கோவில்.  ஆனால் எங்களின் சோர்வு காரணமாக நாங்கள் சென்னையைவிட்டு காலை 8 மணிக்குதான் கிளம்பினோம். இடதுபக்கத்தில் அமைந்துள்ள உணவகத்தில் காலைஉணவை சாபிட்டவுடன்,12 மணிவரை நடைதிறந்திருப்பார்கள்  என்பதாலும் இடதுபக்கத்திலேயே இக்கோவில் அமைந்திருப்பதாலும், நாங்கள் சென்று வழிபட்டோம். மீண்டும் நிச்சயமாக விஜயராகவபெருமாளை தரிசனம் செய்வோம். அப்பொழு இந்த பக்கத்தை மேம்படுத்துவேன்.

கோவில் சிறப்பு. 

1. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யபட்ட திவ்ய தேசம்.

2. ராமர் ஜடாயுவுக்கு  ஈமகிரியை செய்த இடம்.

3. ஈமக்கிரியை செய்யும் நேரத்தில் அக்னியின் வெப்பம் தாங்காமல், வலதுபுறமிருக்கும், ஸ்ரீதேவி தாயார் இடதுபுறமும், இடதுபறமிருக்கும் பூதேவி தாயார் வலதுபுறமிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. 

4.ஜடாயுவிற்கு தனி சன்னதியுள்ளது.

5. பெருமாள் ஜடாயுவை அவரது தொடையில்அமர்திகககொண்டிருக்கிறார்.

7. இத்தல தாயார் மரகதவல்லியை வேண்டிக்கொண்டு, வறுத்த பயிறை மடியில் கட்டிக்கொண்டு இத்தலத்தில் தூங்கினால், மறுநாள் அந்த பயிர் முளை கட்டிருந்தால், அவர்ளுக்கு குழந்தை பாக்கியம் உறுதி என்பது பக்தர்ளின் நம்பிக்கை.

8. இராமானுஜர் கல்வி கற்ற இடமாக இந்த தலம் விளங்குகிறது. ராமானுஜரின் ஆசிரியர் யாதவ பிரகாசர் இந்த ஊரை சேர்ந்தவர்.

9.. ராமானுஜருக்கு தனி சன்னதியுள்ளது.

10. கல் குதிரை மிகவும் சிறப்பு வாய்ந்தது. குதிரையின் உறுப்புகள் அனைத்தும் உயிருடன் உள்ள குதிரை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை வடித்த சிற்பி அவர் ஆயுட்காலம் முழுவதும் இது போன்ற சிறப்பான குதிரை வடிப்பதில்லை என்று உறுதியாகயிருந்தார். அதன் காரணமாக 8ஆம் நாள் உற்சவம் அன்று பெருமாள்அந்த சிற்பிவாழ்ந்த வீட்டின் முன்பு நின்று அவருக்கு தரிசனம் கொடுக்கிறார். (இந்த குதிரையை தரிசனம்செய்யவே நாங்கள் மீண்டும் இத்தலம் செல்வோம்) .

Photos and videos.




































No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...