பரிமளரெங்கர் (தரிசனநாள் -11.11.2025)
அமைவிடம்
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் இந்தளுர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
கோவில் சிறப்பு
108 திவ்யதேசத்தில் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றது. ஏகாதசி விரதம் சிறப்பு பெற காரணமாகயிருந்த தலம். காவிரியம்மன் ரெங்கநாதரை வழிபடுகிறார். இக்கோவில்கோபுரம் 250 அடி நீளம் மற்றும் 230 அடி அகலமும் கொண்டது. எமனும் அம்பரீசனும் திருமாலின் திருவடியை பூஜித்தபடி உள்ளனர். 12 அடி நீளமும், 6 அடி அகலமும்கொண்ட பச்சை கல்லால் வடிவமைக்கப்பட்ட ரெங்கநாதர்.
பஞ்ச ரெங்கநாதர் தலங்கள்
1. ஆதிரெங்கம் - ஸ்ரீரெங்கபட்டினம் (கர்நாடகா)
2. மத்யரங்கம் - ஸ்ரீரெங்கம்
3. அப்பாலரெங்கம் - கோவிலடி (அப்பக்குடத்தான்)
4. சதுர்த்தரங்கம் - சாரங்கபாணி (கும்பகோணம்)
5. பஞ்சரெங்கம் - பரிமளரெங்கம் (இந்தளுர்)
ஏகாதசி விரத சிறப்பு
நாட்டை ஆண்டுவந்த அம்பரீசன் என்ற மன்னன், அவரின் மூதாதையர்கள் அறிவுரைப்படி ஏகாதசி விரதமிருந்து வந்தார். அவரின் தொடர் ஏகாதசி விரதத்தை கண்டு தேவர்கள் மிகவும் பயந்தனர். ஏனெனில் அவர்களின் இந்திர லோக பதவி பறிபோய்விடும் என்று. செய்வதரியாதிருந்த நேரத்தில், துர்வாச முனிவர், அவரின் தவத்தின் மீது கொண்ட கர்வம் காரணமாக, அம்பரீசனின் விரதித்திற்;கு இடையுறு செய்ய கிளம்பினார். அவர் வந்து சேருவதற்குள், ஏகாதசி திதி முடிந்துவிட்து. துவாதசி அன்று உணவு அருந்தி விரதத்தை முடிக்க வேண்டும் என்பதே விரதத்தின் விதி. இதை அறிந்த, துர்வாச முனிவர் மன்னனிடம் சென்று நான் இன்று உன்னுடன் உணவருந்த வருகிறேன் என்று கூறுகிறார். தான் சென்று காவிரியில் நீராடி விட்டு, மதிய வந்தனத்தை(மாத்யானிகம்)முடித்துவிட்டு வருவதாக கூறி செல்கிறார். இதற்குள் துவாதசி திதி முடிந்து விடும் என்பது முனிவர் கணக்கு. ஆனால் அம்பரீச மகாராஜா அவரின் குலகுருவின் வழிகாட்டுதல்படி மூன்று உத்திரணி (3ஸ்பூன்) நீர் அருந்தி விரதத்தை முடித்து விடுகிறார். இதை முனிவர் அவரின் தவத்தின் பயனால் அறிந்து கொண்டு, அவரின் தோல்வியை தாங்க முடியாமல், பூதத்தை கொண்டு மன்னனின் உயிரை பறிக்க உத்தரவிட்டார். அவர் ஏவிவட்ட பூதத்தை பார்த்து அதிர்ந்த மன்னன், இந்த பரிமளரங்கனிடம் சரணடைந்தான். இறைவன் மன்னனை காத்தார். முனிவரும் அவரின் தவறை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கோரினார். அம்பரீச மன்னரின் விருப்பத்திற்கினங்க ரெங்கநார் இத்தலத்திலேயே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலை பற்றி நான் அறிந்திருந்தாலும். தரிசனம் செய்வது, இதுவே முதல்முறை.
பயண அனுபவம்
நாங்கள் 2021 ஆம் ஆண்டுமுதல் தொடந்து இந்த ஐப்பசி மாதத்தில் (துலா ஸ்நானம்) காவிரியில் நீராட வேண்டும் என்று முடிவெடுத்து, 21, 23,25 என்று மூன்று ஆண்டுகள் தான் செல்ல முடிந்தது. 2023 ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் மயிலாடுதுறையை சுற்றியுள்ள பல தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தோம். (மயிலாடுதுறை மாவட்ட தலங்கள் 1 மற்றும் 2 என்று இரண்டு பிளாகுகள் உள்ளன) ஆனால் காசிவிஸ்வநாதர் கோவிலில் வழிபாடு செய்தது இதுவே முதல் முறை. இந்த ஆண்டும் எங்களுக்கு நேரமின்மை காரணமாக 10ஆம் தேதி இரவு உழவன் புகைவண்டியில் கிளம்பி, 11 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு, சோழன் புகைவண்டியில் சென்னை திரும்பினோம்.
அதிகாலை இரண்டு மணிநேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, பின் காவிரியில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து, காலை உணவை முடித்துக்கொண்டு, 9 மணிக்கு கிளம்பினோம். மூன்று கோவில்கள் வழிபட்டு திரும்பினோம்.1. கதிராமங்கலம் வனதுர்கை. 2. பரிமளரெங்கர் 3. வானமுட்டி பெருமாள். எப்பொழுதும் நாங்கள் தான் பயணதிட்டத்தை தீர்மானம் செய்வோம். ஆனால் அன்று தொடர் பயண சோர்வு காரணமாக, நாங்கள் ஒரு ஆட்டோ பிடித்து, 12.30 மணிக்கு நாங்கள் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் எந்த கோவிலுக்காவது அழைத்து செல்லுங்கள் என்றோம். பரிமளரெங்கர் மற்றும் வானமுட்டி பெருமாள் தரிசனம் அந்த ஆட்டோ ஓட்டுநர் மூலமே எங்களுக்கு கிடைத்தது.
Photos
No comments:
Post a Comment