வானமுட்டிப் பெருமாள்

 வானமுட்டிப் பெருமாள் (தரிசனம்- 11.11.2025)

அமைவிடம்

நாகப்பட்டிணம் மாவட்டம், மயிலாடுதுறை அருகில் கோழிகுத்தி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. 

சிறப்பு

அத்திமரத்தால், உருவாக்கப்பட்ட பெருமாள். மிக சிறிய ஆலயமாக உள்ளதால், மிக அருகில் தரிசனம் செய்ய முடிகிறது. பெயருக்கு தகுந்தாற்போல் விருஷ்வரூபமாக காட்சி தருகிறார், 15 அடி உயரத்தில்.(வானத்தை தொடுவது போல்) எனக்குபார்த்த உடன், பிரமிப்புதான் ஏற்பட்டது. நாங்கள் இதனால்வரை இந்த பெருமாளை பற்றி அறிந்திருக்கவில்லை. சப்தஸ்வர ஆஞ்சநேயர், இந்த ஆஞ்சநேயர் சிலையை தட்டினால்;,  ஏழு ஸ்வரங்களின் சப்தம் கேட்குமாம். மரத்தாலான பெருமாள் என்பதால், திருமஞ்சனம் கிடையாது தைலகாப்புமட்டுமே. வேருடன் உள்ள மரத்தில் அமைந்துள்ளதால், வேரை மறைத்து, திருவடியில் கவசம்சாற்றியுள்ளனர். உற்சவர் நரசிம்மருக்கே திருமஞ்சனம். 800 ஆண்டுகள் பழமையான கோவில். இந்த பெருமாளை தரிசத்தால், சோளிங்கர் நரசிம்மர், காஞ்சிபுரம் அத்திவரதர், திருப்பதி ஸ்ரீநிவாசபெருளை நினைவூட்டுகிறார். 

தலவரலாறு

நிர்மலன் என்ற அரசன் குஷ்ட(தொழுநோய்) நோயால் மிகவும் துன்பப்பட்டான். ஒருமுனிவர் இந்த அரசனுக்கு இறைவழிபாட்டை வலியுருத்தினார். இறைவனின் அறிவுருத்தல்படி காவிரிக்கரைஓரமாகவே சென்று நீராடி வழிதடத்தில் உள்ள கோவில்களை வழிபட தொடங்கினார் மன்னர். அசரீரியாக ஒலித்த பெருமாள், மூவலூர் ஆபத்சகாயேஸ்வரர் உனக்கு வழிகாட்டுவார் என்று கூறினார். இவ்வாறு சென்ற மன்னன் ஒரு இடத்தலி;ருந்த காவிரியில் நீராடிய பொழுது, அவனின் தோல் நோய் குணமுற்று, மேனி பொன்னாக மாறியது. அங்கிருந்த ஒரு அத்திமரத்தில் பெருமாள், சங்கு சக்கரம் கதையுடன் அந்த மன்னனுக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்தார். மன்னனின் பாவங்கள் நீங்கியதால்  இந்த இடம் “கோடிஹத்தி” என்று அழைக்கப்பட்டது.  இதுவே தற்சமயம், கோழிகுத்தி என்று அழைக்கப்படுகிறது. பின்னர் மன்னன் பெருமாள் மீது பக்திகொண்டு மகரிஷியாகவே மாறிவிட்டார். இவரே பிப்பல மகரிஷி. அத்தல தீர்த்தம் “பிப்பல மகரிஷி தீர்த்தம”;.

சரபோஜி மகாராஜா இத்தல பெருமையறிந்து, அவரின் யுத்ததோஷம் நீங்க வேண்டினார். சரபோஜி மன்னருக்கும் பிப்பல மகரிஷிக்கு அருளியது போல் காட்சி கொடுத்தார். கனவில் தான் கண்ட காட்சியை மக்களுக்காக இதே அத்தி மரத்தில் பெருமாளை சிலையாக வடித்தார். மன்னனே பெருமாளின் தோற்றத்திற்கு தகுந்தாற்போல் “வானமுட்டிபெருமாள்” என்று திருநாமம் சூட்டினார்.  தரிசனம் செய்யும் சமயம் நமக்கும் நேரடி தரிசனம் கிடைத்தது போன்ற ஆத்ம திருப்தி கிடைக்கிறது. சிதிலம் அடைந்திருந்த கோவில் 2007 ஆம் ஆண்டு ஊர்மக்கள் மற்றும் பக்தர்களால் குடமுழுக்கு நடத்தப்பட்டது. தற்சமயம் இந்து அறநிலயத்துறையின் மூலம் செயல்படுகிறது.

பயண அனுபவம்

நாங்கள் 2021 ஆம் ஆண்டுமுதல் தொடந்து இந்த ஐப்பசி மாதத்தில் (துலா ஸ்நானம்) காவிரியில் நீராட வேண்டும் என்று முடிவெடுத்து, 21, 23,25 என்று மூன்று ஆண்டுகள் தான் செல்ல முடிந்தது. 2023 ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் மயிலாடுதுறையை சுற்றியுள்ள பல தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தோம். (மயிலாடுதுறை மாவட்ட தலங்கள் 1 மற்றும் 2 என்று இரண்டு பிளாகுகள் உள்ளன) ஆனால் காசிவிஸ்வநாதர்  கோவிலில் வழிபாடு செய்தது இதுவே முதல் முறை. இந்த ஆண்டும் எங்களுக்கு நேரமின்மை காரணமாக 10ஆம் தேதி இரவு உழவன் புகைவண்டியில் கிளம்பி, 11 ஆம் தேதி மதியம் 1  மணிக்கு, சோழன் புகைவண்டியில் சென்னை திரும்பினோம். அதிகாலை இரண்டு மணிநேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, பின் காவிரியில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து, காலை உணவை முடித்துக்கொண்டு, 9 மணிக்கு கிளம்பினோம்.  மூன்று கோவில்கள் வழிபட்டு திரும்பினோம்.1. கதிராமங்கலம் வனதுர்கை. 2. பரிமளரெங்கர் 3. வானமுட்டி பெருமாள். எப்பொழுதும் நாங்கள் தான்  பயணதிட்டத்தை தீர்மானம் செய்வோம். ஆனால் அன்று  தொடர் பயண சோர்வு காரணமாக, நாங்கள் ஒரு ஆட்டோ பிடித்து, 12.30 மணிக்கு நாங்கள் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அதற்;கு தகுந்தாற்போல் எந்த கோவிலுக்காவது அழைத்து செல்லுங்கள் என்றோம். பரிமளரெங்கர் மற்றும் வானமுட்டி பெருமாள் தரிசனம் அந்த ஆட்டோ ஓட்டுநர் மூலமே எங்களுக்கு கிடைத்தது.

Photos.















No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...