கதிராமங்கலம் வனதுர்கை

 கதிராமங்கலம் வனதுர்கை (தரிசனம் -11.11.2025)

அமைவிடம்

மையிலாடுதுறையிலிருந்து,  15 கி;மீ தொலைவில் உள்ளது. கவிசக்கரவர்தியின் ஊரானா தேரழந்தூர் என்ற ஊர் இங்கிருந்து மிக அருகில் உள்ளது. கம்பர் இந்த துர்கையின் மீது மிக பக்திகொண்டவர். ஒருநாள் அடை மழையின் காரணமாக கம்பரின் வீடு நனைத்தது. அன்று இரவு தூங்க கூட இயலாமல் வருந்திய கம்பர் இந்த துர்கையை மணமுருகி  வணங்கினார். காலை கண்விழித்து பார்தவுடன் அவர்வீடு கூறை வேய்ந்திருந்தது. கதிர்வேய்ந்த மங்கள நாயகி என்று இறைவனை சிறப்பித்து வணங்கி பாடினார். அன்றுமுதல் கதிர்வேய்ந்தமங்களம் என்று பக்தர்ளால் அழைக்கப்படலாயிற்று. அதன் காரணமாகவே இந்த ஊர் கதிராமங்களம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. 

முன்புறம் துர்கையாகவும், பின்புறம் சர்பதோற்றத்திலும் (பாம்பு வடிவில்)காட்சி தருகிறார். துர்கை பின் புறம் வைத்துள்ள கண்ணாடி மூலமே சர்பதோற்றத்தை தரிசனம் செய்ய முடியும். சிவ  பூஜைக்காக பூபரிக்க வந்த ராகுவே இந்த துர்கையை முதன்முதலில் தரிசனம் செய்து வணங்கினார். துர்கைக்கு அர்சனை செய்யும் நேரத்தில் வலது உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் இருக்குமாம். ராகு பரிகார தலமாகவும் உள்ளது இந்த ஆலயம்.

நாங்களே காரை ஓட்டி சென்று தரிசனம் செய்த பல தலங்களில் இதுவும் ஒன்று. ஆனால் பிளாக் எழுதுவது இதுவே முதல்முறை.

பயண அனுபவம்

நாங்கள் 2021 ஆம் ஆண்டுமுதல் தொடந்து இந்த ஐப்பசி மாதத்தில் (துலா ஸ்நானம்) காவிரியில் நீராட வேண்டும் என்று முடிவெடுத்து, 21, 23,25 என்று மூன்று ஆண்டுகள் தான் செல்ல முடிந்தது. 2023 ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் மயிலாடுதுறையை சுற்றியுள்ள பல தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தோம். (மயிலாடுதுறை மாவட்ட தலங்கள் 1 மற்றும் 2 என்று இரண்டு பிளாகுகள் உள்ளன) ஆனால் காசிவிஸ்வநாதர்  கோவிலில் வழிபாடு செய்தது இதுவே முதல் முறை. இந்த ஆண்டும் எங்களுக்கு நேரமின்மை காரணமாக 10ஆம் தேதி இரவு உழவன் புகைவண்டியில் கிளம்பி, 11 ஆம் தேதி மதியம் 1  மணிக்கு, சோழன் புகைவண்டியில் சென்னை திரும்பினோம். அதிகாலை இரண்டு மணிநேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, பின் காவிரியில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து, காலை உணவை முடித்துக்கொண்டு, 9 மணிக்கு கிளம்பினோம்.  மூன்று கோவில்கள் வழிபட்டு திரும்பினோம்.1. கதிராமங்கலம் வனதுர்கை. 2. பரிமளரெங்கர் 3. வானமுட்டி பெருமாள். எப்பொழுதும் நாங்கள் தான்  பயணதிட்டத்தை தீர்மானம் செய்வோம். ஆனால் அன்று  தொடர் பயண சோர்வு காரணமாக, நாங்கள் ஒரு ஆட்டோ பிடித்து, 12.30 மணிக்கு நாங்கள் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அதற்;கு தகுந்தாற்போல் எந்த கோவிலுக்காவது அழைத்து செல்லுங்கள் என்றோம். பரிமளரெங்கர் மற்றும் வானமுட்டி பெருமாள் தரிசனம் அந்த ஆட்டோ ஓட்டுநர் மூலமே எங்களுக்கு கிடைத்தது.

Photos








No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...