சண்டிகர் நகரசுற்று

 சண்டிகர் நகரசுற்று (நாள் 29.10.2025)

 சண்டிகர் அடிப்படை செய்திகள்.

இது ஒரு யூனியன் பிரதேசம். பஞ்சாப் மற்றும் ஹரியானா இந்த இரண்டு மாநிலங்களுக்கான தலைநகரம். “அழகிய நகரம்” என்ற பெயர் பெற்றது. நமது நாட்டு சுதந்திரத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட திட்டமிட்ட நகரம். இந்த நகரம் கட்டிட கலைக்கும் வடிவமைப்புக்கும் உலகளவில் மிகவும் புகழ் பெற்றது. அமெரிக்க கட்டிட கலை நிபுணரால் முதலில் திட்டமிடப்பட்டு, பின் பிரான்ஸ் நாட்டு நிபுணரின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டது. 2016 ஜுலை மாதம் முதல் யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரமாக அங்கீகரிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு பிபிசி செய்தியின் படி உலகிலேயே சிறந்த திட்டமிட்ட நகரம் என்ற பெயர் பெற்றது. 





சண்டிகரும் நானும்

திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த நகரத்தை பார்க்க பலருக்கும் ஆவலிருக்கும். நானும் அவ்வாறே இந்த நகரைசுற்றிபார்க்க  இந்த ஹிமாசல் சுற்றுலாவை பயன்படுத்திக்கொண்டேன். 2005 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்த நகரத்திற்கு சென்ற போது, குலு, மனாலி செல்ல பயண வழியாகவே பயண்படுத்திக்கொண்டோம்.

2018 ஆம் ஆண்டு எங்களின் மகள் ஹிமாசலில் உள்ள  மண்டி என்ற நகரத்தில் அமைந்துள்ள ஐஐடி யில் அவளின் இரண்டாவது பட்ட மேற்படிப்பை தொடர சென்ற போது, கல்லூரி சேர்கைக்காக நாங்கள் இந்த சண்டிகர் வழியாக பயணித்தோம். அப்பொழுதும் இந்த நகரத்தை பயண வழியாகவே பயண்படுத்திக்கொண்டோம். ஹிமாசல் தேவி தரிசனம் என்ற உடன் நாங்கள் தொடர்பு கொண்ட அனைத்து டிராவலர்களும், சண்டிகரிலேயே பயணத்தை தொடங்கினர். இம்முறை இந்த வாய்பை பயன்படுத்தி எங்களின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டோம்.

1.ரோஸ் கார்டன்

1967 ஆம் ஆண்டு சண்டிகர் மாநிலத்தின் முதன்மை ஆணையர் டாக்டர்  மொகிந்தர்சிங் ரத்தவா என்பவரின் வழிகாட்டுதல்படி  துவங்கப்பட்து. ஆசியாவின் மிக பெரிய ரோஜா பூந்தோட்டம் என்ற பெயர் பெற்றது. 30 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைக்கப்பட்டது. முன்னாள் குடியரசு தலைவர்  ஜாகீர் உசைன் அவர் பெயரில். இயங்குகிறது. 1600 வகைகயான 50,000 செடிகளை கொண்டது இந்த பூங்கா. ஆசியாவிலேயே பெரிய ரோஜா தோட்டம் என்ற இடத்தை பெற்றது. ஓவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் மலர் கண்காட்சி நடை பெறுகிறது. இதற்கான முயற்சி காரணமாக நாங்கள் சென்ற நேரம் ஒரு பூவைகூட பார்கவில்லை. நிலத்தில் உரமிட்டு செடி பராமரிப்பு பணிநடை பெற்றுக்கொண்டிருந்தது.

 


















2. அரசு அருங்காட்சியகம் மற்றும் ஓவியக்கூடம்




ரோஜா தோட்டத்ததுக்கு அருகில் 10 சி என்ற இடத்தில் அமைந்துள்ளது. உலக புகழ்பெற்ற கட்டிட கலைஞர “லீ கொபிசியே” என்பவரால் 1947 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த இடம் மூன்று பிரிவாக இயங்குகிறது.  1. தேசிய வரலாற்று அருங்காட்சியகம் 2. தேசிய உருவபடக்கூடம் 3. சண்டிகர் கட்டிடகலை அருங்காட்சியகத்தியலில், 10,000க்கு மேற்பட்ட காட்சி பொருட்கள் உள்ளன. பெரும்பாலும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களேயிருந்தன. 

3. சுக்னா ஏரி.






இந்த ஏரி செக்டார் 1 ல் அமைந்துள்ளது. இந்த பகுதி இமயமலை அடிவார பகுதியாகும். பரப்பளவு 3 கி.மீ. ஆழம் 8 அடி முதல் 16 அடி வரை. இதன் அருகிலேயே ஜப்பனீஸ் கார்டன் உள்ளது. ஆனால் இதை பாரக்க வில்லை.

4.ராக் கார்டன்

 இந்த ராக் காடன் பற்றிய கட்டுரையை நான் அமுதசுரபி தீபாவளி மலரில் 2010 ஆம் ஆண்டு படித்தேன்.  அன்று முதல் பார்கவேண்டும் என்ற அவா என் மனதிலிருந்தது. இதை “நேக்சந்” பாறைசிற்ப தோட்டம் என்று அழைப்பர். இந்த தோட்ம் 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து நமது பாரதம் கௌரவித்துள்ளது.  (நான் ஒரு கிராப்ட் பைத்யம் என்றே சொல்லலாம்).எனக்கு ஆர்ட்டை விட கிராப்ட் மேல் தால்தான் விருப்பம் அதிகம் நான் கிராப்ட் வகுப்பு எடுத்ததே அதிகம் என் வாழ்வில். நான் என் 10 வயது முதல் 50 வயது வரை அதிகமாக கைவினை பொட்கள் செய்துள்ளேன் எனக்கு கிடைத்த நேரம் மற்றும் எனக்கு கிடைத்த பாக்கெட் மணி அனைத்தையும் இதற்கே செலவழிப்பேன். என்னுடைய 50வது வயதில் சுற்றுசூழல் மேல் ஆர்வம் கொண்டு என்னுடைய கைவினை பொருட்கள் செய்யும் வழக்கத்தை கைவிட்டுவிட்டேன். இந்த ராக்கார்டன் பெரும்பாலும், இந்த நகரத்தில்லிருந்த பழைய மற்றும் தேவையற்ற பொட்களான கண்ணாடி , தரை ஒட்டல்கள் (டெயில்ஸ்) தட்டாங்கள் ( ஓடு சில்கள்) இவற்றை பயன் படுத்தி உருவாக்கினார். 1983 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளிட்டது நமது அரசு. நாள் ஒன்றுக்கு 5000 பார்வையாளர்கள் இங்கு வருகின்றனர்.






















































































30ஆம் தேதி காலை சண்டிகரிலிருந்து, டெல்லிக்கு ராஜதானியில் பயணித்து, டெல்லியிலிருந்து,   புகைவண்டியில் பயணித்து 2ஆம் தேதி காலை சென்னையைஅடைந்தோம். சுபம்.



No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...