பாசர் சரஸ்வதி (தரிசனம்- 24.9.2025)
அமைவிடம்
தெலுங்கான மாநிலம், ஹைதராபாத்தி;லிருந்து, 210 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகவும் புராதனமான கோவில்.
கோவில் வரலாறு
மகாபாரத போர் முடிந்தவுடன், வியாசமகரிஷியும், அவரது மகன் சுகர்மகரிஷியும், பலவித அசௌகரியங்களுக்கு பிறகு, அவர்களை அமைதிபடித்திக்கொள்ள பல நதிகளில் நீராடி இறைவழிபாடு செய்தனர். அவ்வாறாக கோதாவரிநதியில் நீராடி அதன் கரையில் கடல்மணல் கொண்டு முன்று பிண்டங்களை பிடித்து, துர்கா, லெஷ்மி, சரஸ்வதி, என்று உருவகப்படுத்தி வழிபட்டனர். மக்களுக்கு ஞானம் வேண்டியே வழிபட்டதால், இந்த இடம் ஞான சரஸ்வதி கோவிலானது. நம் பாரத்தில் விரல்விட்டு எண்ணக்ககூடிய அளவே சரஸ்வதி கோவில்கள் உள்ளன. அவற்றில் மிகவும் தொன்மையானது இந்த கோவில்.
இத்தலத்தை நான் எவ்வாறு அறிந்தேன்?
நான் படிக்கும் புனரூத்ரான் வியாபீடத்தின் பாடத்திட்டங்கள், அனைத்தும் இந்த இறைசன்னதியில் சமர்பித்த பின்பே, மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. எங்கள் பாடத்திட்டத்தின் முதல் பாடமே, இக்கோவிலின் பெருமையும் மற்றும் வரலாறும்தான்.
வாய்ப்பு
தசராவில் நாங்கள் ஹிமாச்சல் மாநில சக்தி பீடங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். அம்மாநிலத்தின் கன மழைகாரனமாக எங்களின் பயணத்தை ரத்து செய்தோம். கிடைத்த நேரத்தை பயன்படுத்த எண்ணி இந்த” பாசரா கோவிலும் ஹைதராபாத்தும்” என்று எங்களின் பயணதிட்டத்தை உடனே மாற்றி பயணபதிவு செய்து கொண்டோம். காட்சிகுடா ரயில் நிலையத்தி;லிருந்து 4 மணிநேரம் பயணம் பாசர் ரயில் நிலையததிற்கு.
1.கோதாவரி ஆற்றங்கரை
2.சரஸ்வதி கோவில்.
ஊர் மிகவும் சிறியது. தங்கும் விடுதிகள் மிகவும் உயர்நிலையை எதிர்பார்கமுடியாது. கோவில் மிகவும் பெரியது என்ற சொல்லமுடியாது. தரிசன நேரம் ஒரு மணி நேரத்திற்குமேல் ஆனது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு “அட்சராப்பியாசம்” செய்யவே இங்கு வருகின்றனர்.
3.வியாசர் குகை
வியாசர்குகை இங்குள்ளது. ஏற்கனவே நாங்கள் உத்ரகாண்ட் மாநிலத்தில், மானா என்ற இந்தியாவின் முதல் கிராமத்திலும், காளாபானி காளிமந்திர் கோவில் எதிரில் (குஞ்சி கிராமம் அருகில்) உள்ள வியாசர் குகை பார்திருக்கிறோம்.
4. விநாயகர் கோவில்
5. மியூசிக் ஸ்டோன்.
6. தத்தாத்ரேயர் கோவில்
7. சிவன் கோவில்
























No comments:
Post a Comment