Equality Statue (தரிசனநாள் - 26.9.2025)
அமைவிடம்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடம், தற்சமயம் மிகபுகழ்மிக்கஆன்மீக சுற்றுலா தலமாக உள்ளது.
வரலாறு
வைணவ ஆச்சாரியர், ராமானுஜர் என்பருக்கு எழுப்பபட்ட சிலை. இவரின் ஆயிரமாம் ஆண்டு பிறந்தநாள் நினைவாக உருவாக்கப்பட்ட வைணைவ வழிப்பாட்டுத்தலம்.
அமைப்பு
216 அடி உயரமுள்ள பஞ்சலோகத்தாலான சிலை.2019 ஆம் ஆண்டு சிறிய ஜீயரால் நிறுவப்பட்டது. 216 அடி உயரம் கொண்ட இராமானுஜர் சிலை,54 அடி உயரமான தாமரை வடிவ பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அவர் அமர்ந்த நிலையில் நம்மை காண்கிறார். 120 கிலோ தங்கம் இந்த பஞ்சலோக சிலை மேல் பூசப்பட்டுள்ளது. இந்த 120 என்ற எண்ணிக்கை அவரின் வாழ்நாளை குறிக்கிறது.
தரை தளத்தில் 108 திவ்யதேசங்களின் பெருமாள் தாயார், சிலைகள் ஊர் பெயர் மற்றும் எந்த மாநிலம் , மாவட்டம், யாரால் மங்களாசாசனம் ( பிரபந்தம் பாடப்பட்டது) செய்யப்பட்டது போன்ற குறிப்புகளுடன் சிறய கோவில் போன்ற தனி சன்னிதானம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் ராமானுஜரின், வாழ்கை வரலாறு படங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பின் ஆன்மீக மின்நூலகமும்
ஆய்வு மையங்களும் அமைந்துள்ளது. நடக்க முடியாதவர்களுக்கு மின் தூக்கி வசதியுள்ளது.
கோவில் அமைப்பு
விமானம் பல வகைகயான கட்டிட அமைப்புகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1. ஹோசால்யர்கள் பாணி தூண்கள்.
2. சோழமன்னர்கள்கள் பாணியில் அமைந்த கோபுரங்கள்.
3 .விஜயநகரபேரரசு பாணியில் அமைந்த சன்னதிகள்.
4. நகரா பாணியில் உள்ள சில மண்டபங்கள்
5. பல்லவர்கள் காலத்து கோபுரங்கள்.
6. காகாத்தியா பாணி அமைப்பு கதவுகள் மற்றும் சுவர் அலங்காரங்கள் என்று எந்த வகையிலும் குறைவைக்காத அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கிய கட்டிட கலை.
7. சிம்ம யாளி ( சிங்க அமைப்பு)
8. சுக யாளி ( கிளி அமைப்பு)
9. கருடஸ்தம்பம்
10. வைணவ சிறப்பு பெற்ற கருடன் மற்றும் அனுமன் இவர்களின் வறவேற்ப்பு.
11. யானைகளின் அணிவகுப்பு என்று மன்னர் கால கட்டிட கலைக்கு இணையாண சிறப்புடன் விளங்குகிறது, இந்த இந்த சமத்துவ சிலை.
சமத்துவசிலை பெயர் காரணம்.
இவ்வுலவாழ்விலிருந்து உய்ய ஒரே மந்திரம் “ஓம் நமோநாராயணா” என்பதை அறிந்து, உலமக்கள் அனைவருக்கும் அறியும் வகையிலும் (கற்பிக்கும் வகையில் ) திகோஷ்டியூர் பெருமாள் கோவில் கோபுரத்தில் நின்று கூறியமையால் ( பாகுபாடில்லாமல் அனைவரும் அறிய ) ராமானுஜர் சிலை இப்பெயர் பெற்றது.
நீர் உற்று
இக்காட்சிமிக சிறப்பாக உள்ளது. உள்ளே கைபேசிகள் அனுமதி கிடையாது. கன மழைக்கிடையில் மிகுந்த கவனத்துடன் நாங்கள் ராமானுஜரை தரிசனம் செய்தோம்.
பெருமாள் உட்புறப்பாடு.
















No comments:
Post a Comment