ஹைதராபாத் சுற்றுப்பயணம் (நாட்கள் - 25,26,27, மற்றும் 28.9.2025)
பாசர் சரஸ்வதி கோவில் வழிபாட்டை முடித்துக்கொண்டு நாங்கள் ஹைதராபாத் நகரத்தை சுற்றியுள்ள இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தோம். கனமழை காரணமாக எங்கள் சுற்றலா தடைபடவில்லை என்றாலும் சற்று பின்னடைவு ஏற்பட்டது.
1.பிர்லாமந்திர்
வெள்ளை சலவை கல்லினாலான வெங்கடாஜலபதி கோவில். அந்த கோவிலருகில் லும்பினி பூங்கா, பிர்லா கோளரங்கம், மற்றும் அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. மழை காரணமாக கோவில்தரிசனமே சற்று கடினமானது எங்களுக்கு.
2. ஸ்கந்தகிரி சுப்ரமணிய ஸ்வாமி கோவில்
இந்த கோவில் செகந்தராபாத்நகரில் அமைந்துள்ளது. காஞ்சி காமகோடி பீடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. பிராதன தெய்வமாக சுப்ரமணியர் இருந்தாலும், ஏகாம்பரநாதர், காமாட்சிஅம்மன் மற்றும் பெருமாள் துர்கை என்று பல சன்னதிகளும் சிறப்புற்றிருந்தன. நவராத்திரி பெருவிழா வேறு நடைப்பெற்றுக்கொண்டிருந்ததால்,சிறப்பு பூஜையும் அலங்காரமும் மெய்சிலிர்க்க வைத்தது.
3. பிலிம் நகர் தெய்வ சன்னிதானம்.
ஜுப்ளிஹில் என்ற இடத்தில் அமைந்துள்ள கோவில். வெள்ளை பளிங்கால் கட்டப்பட்ட கோவில். வெங்கடேஸ்வரர், லெஷ்மி, ராமர் ஹனுமான் என்று பல சன்னதிகளும் நிறைந்து காணப்பட்ட கோவிலாக விளங்கியது. மிக சுத்தமாக், பராமரிக்கப்பட்டும், கலைநயத்துடனும் கட்டபட்ட கோவிலாகும். தெலுங்கு திரைபடங்களில் இக்கோவில் மிகவும் பிரபல்யம்.
4. ஜெகன்நாத் மந்திர்.
கனமழை காரணமாக நாங்கள் பிலிம் நகர் கோவிலில் இரண்டு மணிநேரத்திற்கு மேல் தங்கி விட்டோம். மழை சற்ற குறைந்தபின் கூகுளில் தேடியதில் இந்த கோவில் அருகிலிருந்ததால், இங்கு சென்றோம். Cab கிடைப்பது வேறு மிகவும் கடினமாகயிருந்தது. இக்கோவில் ஒடிசா மாநில கோவில் போன்று இப்பகுதியில் உள்ள ஒடியா சமூக மக்களால் 2009 ஆம் ஆண்டு கட்டபட்ட கோவில், ஜகன்நாதர் தேரோட்ட விழா மிக சிறப்புபற்று விளங்குகிறது. (எங்களின் பூரி ஜெகன்நாதர் தரிசன பிளாக் உள்ளது)
5. சில்கூர் பாலாஜி.
ராமோஜி பிலிம் சிட்டி என நாங்கள் எங்களின் அட்வணையில் ஒதுக்கியிருந்தாலும், மழை காரணமாக ரத்து செய்துவிட்டு, சில்கூர் பாலாஜியும், ஸ்வர்ணகிரி வெங்கடேஸ்வரா கோவிலும் செல்லலாம் என்ற நினைத்தால், ஸ்வர்ணகிரி வெங்கடேஸ்வரா கோவில் தரிசனத்தையும்; மழை காரணமாக கைவிட்டோம்.
சில்கூர் பாலாஜி தலபுராணம்.
தெலுங்கான மாநிலம், ரெங்காரெட்டி மாவட்டத்தில்அமைந்துள்ள புகழ் மிக்க கோவில். ஒருவிவசாயி எப்பொழுதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே அவர் வேலையை செய்து கொண்டிருந்தார். வயலில் கிடைத்த விளைச்சலை தானம் அதிகம் செய்து, திருப்பதி பாலாஜியை தவறாது வழிபட்டு வருவதை வழக்கமா கொண்டிருந்தார். அவரின் வயது முதிர்வுகாரணமாக திருப்பதி செல்ல முடியாமல் போனதும், பெருமாள் கனவில் வந்து அவர் வயலில் உள்ள ஒரு எறும்பு புற்றுக்கடியில் வாசம் செய்வதாக கூறியுள்ளார். ஊர் மக்கள் கூடி அவர் வயலில்லிருந்த ஸ்ரீதேவி பூதேவி சமேதரான வெங்கடேஸ்வரரை வெளியில் எடுத்து வழிபடலாயினர். 14 ஆம் நூற்றாண்டிலிருந்த ராம பக்ததாசரின் மாமன்மார்களான வெங்கண்ணாவும், அக்கண்ணாவும் இந்த கோவிலை எழுப்பியதாக வரலாறு கூறுகிறது.
6. சார்மினார்.
1591 ஆம் ஆண்டு நான்கு கோபுரங்களை கொண்டு கட்டப்பட்ட ஒரு மசூதியாகும். பிளேக் நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டதை கொண்டாடும் பொருட்டு முகம்மது அலி குப்ஷா என்பவரால் கட்டப்பட்டது. இந்த சார்மினார் என்ற கட்டிடத்தை மையமாக கொண்டே இந்த ஐதராபாத் நகரம் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து கோல்கொண்டா கோட்டைக்கு ஒரு சுரங்கப்பாதையும் உள்ளது. தற்சமயம் தொல்லியல் துறைகட்டுப்படாட்டின் கீழ் இயங்கி வருகிறது. ஹைதராபாத் நகர சுற்று என்றாலே தவறாது பார்வையிட வேண்டிய ஒரு சுற்றுலா மையம்.
7.பாக்கியலெட்சுமி கோவில்
சார்மினார் பக்கத்திலேயே கட்டப்பட்ட ஒரு இந்து கோவில். 1960 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக தெரிகிறது. இதன் வரிவாக்கம் நீதி மற்ற உத்தரவிற்காக காத்துக்கொண்டிருக்கிறதாம்.
8. சௌமஹல்லா அரண்மனை.
லாபத் ஜங் என்பவர் 1750 ல் தொடங்கி 1869 ஆசப் ஜா இவர் காலத்தில் நிறைவு பெற்றது. 45 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அரண்மனை தற்பொழுது 12 ஏக்கர் மட்டுமே உள்ளது.
\
கோல்கொண்டா கோட்டை, பிலிம் சிட்டி, யாதகிரி குட்டா என்ற நரசிம்மர் கோவில், ஸ்வர்ணகிரி இந்த இடங்கள் நாங்கள் மழையின் காரணமாக செல்ல முடியாமல் போனது.
Indira Park












































No comments:
Post a Comment