குருஷேத்ரம்

 குருஷேத்ரம் (தரிசனநாள். 22,23.10.2025)


அமைவிடம்

ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்று புகழ்மிக்க இந்த ஊர் ஆன்மீகத்துடன் மிக தொடர்புடையது. 2005 ஆம் ஆண்டு நான் இதன் வழியாக பயணிக்கும் போது, பானிபட் மற்றும் குருஷேத்ரம் செல்ல விருப்பபட்டு, தற்பொழுது குருஷேத்ரம் மட்டும் செல்லும் வாய்பை பெற்றேன்.

பயண அனுபவம்

நாங்கள் எங்ளின் உறவினர் வீட்டு திருமணத்தை வாய்பாக பயன்படுத்தி ஹியானா, பஞ்சாப், மற்றும் ஹிமாச்சல் மாநிலங்களுக்கு செல்ல பயணதிட்டமிட்டோம். இதில் முதலாவதாக இருந்ததே இந்த குருஷேத்ரம்.

சென்னையில்லிருந்து புகைவண்டியில் டெல்லிக்கு பயணித்து, அங்கிருந்து, குருஷேத்ரம் செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் . மதுராவில் கூட்ஸ்  வண்டி தடம் புரண்டதன் காரணமாக மாற்று பாதையில் செல்ல நேரிட்டததால், நாங்கள் முன்பதிவு செய்த புகைவண்டியை தவறவிட நேரிட்டது. 

டெல்லியிலிருந்து வாடகை கார் அமர்திக்கொண்டு குருஷேத்திரத்தை 22 ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு சென்றடைந்தோம். 

இங்கு பார்க அதிகமான இடங்கள் உள்ளன. நாங்கள் கிருஷ்ணர் உபதேச இடம், பீமன் உருவாக்கிய குளம், மற்றும் பீஷ்மர் அம்பு படுக்கையில்லிருந்த இடம் என்று குறிப்பாக சில இடங்களுக்கு மட்டும் சென்றோம். (ஒருநாள் நாள் சுற்றாக) 

பிரம்ம சரோவர்






பிரம்மாவால் உருவாக்கப்பட்ட ஏரி. இந்த ஏரி தற்சமம் நவீன வசதிகளுடன் 3300 அடி நீளம் மற்றும் 1500அடி அகலத்துடன் செவ்வக வடிவில் புதுபிக்கப்பட்டுள்ளது. அம்மாவாசை மற்றும் பௌர்ணமி அன்று லட்சகணக்கான மக்கள் இந்த இடத்தில் நீராடுகிறார்கள். புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் இவற்றின் காட்சிகள், மற்றும் இந்த குருஷேத்ரத்திறக்கு வருகைபுரிந்தவர்களின் வரலாறு என்று பல படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

காத்யாயினி கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. 

நாங்கள் இந்த சரோவரக்கு எதிரிலேயே ரூம் புக் செய்திருந்ததால். இரவே இங்கு ஒருமுறை சென்றோம். 

பத்ரிநாராயணன் கோவில்



MY Hubby Playing Dolki.














இங்க அமைந்துள்ள ஒரு கோவில். எல்லா புனித நகரங்களிலும் இது போன்று எண்ணற்ற கோவில்கள் அமைந்திருக்கும்.

கல்பனா சாவ்லா பிளானடோரியம்





பீமா குண்ட்

பீஷ்மர் அம்பு படுக்ககையிலிருந்த காலத்தி ஏற்றபட்ட தாகத்தை தீர்க்க பீமனால் உருவாக்கப்பட்ட நீர்நிலை. இந்த இடத்திலேயே விஷ்ணு சகஸ்ரநாமம் பீஷ்மரால் உருக்காவாக்கப்பட்டது. நானும் என் கணவரும் இங்கு அமர்ந்து விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்தோம். (என்கணவருக்கு அன்றாட பனிகளில் இதுவும் ஒன்று)





ஷெகிக் சில் டாம்







இது ஒரு முகமதிய அரண்மனை அல்லது சமாதி என்று சொல்லலாம். நுழைவுக்கட்டணம் ஹரியானா மாநிலத்தில் அனைத்து இடத்திலும் இணையம் வழியாகவே வசூல் செய்கின்றனர். நாங்கள் நீண்ட நேரம் முயற்சித்தும் எங்களால் வாங்க முடியவில்லை.

மகாதேவ் மந்திர்






மிக எழில் நிறைந்த கோவில். நானும் கணவரும் சிவனுக்கு அபிஷேகம் செய்து மகிழ்ந்தோம்.





தேவிக்கிருபா மந்திர்










ஒரே வளாகத்தில் மிக அழகாக மூன்று கோவில்கள் இருந்தன. சிவன், சனி பகவான் மற்றும் அம்மன் கோவில், இந்த கோவில் சக்தி பீடம் என்ற குறிப்பிட பட்டிருந்தது. சக்திபீடங்கள்  ஐந்து மட்டுமே பிரதாண கோவிலகள் என்று கூறுவர். 51 சக்தி பீடங்கள் என்பது பலரும் அறிந்ததே. 108 பீடங்கள்  என்றும் பக்கதர்களால் நம்பப்படுகிறது. அனேகமாக இந்த கோவில் 108 பீடங்களில் ஒன்றாகயிருக்கலாம்.   







 மகாபாரத யுத்தம் நடந்தயிடம்











இங்கு பகவான் கிருஷ்ணர் அர்சுணனுக்கு உபதேசம் செய்வது போன்று ஒரு காட்சி அமைத்துள்ளனர். அர்சுணனுக்கு விஷ்வருபதரிசனம் கொடுத்தது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிற மகாபாரத காட்சிகள் மற்றும் சில இறை சன்னதிகளும் இங்கு அமைந்துள்ளன.
























No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...