ஜுவாலாமுகி

 ஜுவாலாமுகி (தரிசன நாள்-26.10.2025)

அமைவிடம்

ஹிமாசல் மாநிலம், காங்கரா மாவட்டத்தில் அமைந்துள்ள சக்தி பீடம். ஷிவாலிக் மலை தொடரிலேயே அமைந்துள்ளது.

கோவில் சிறப்பு

1. 51 சக்தி பீடங்களில் ஒன்று. 

2. கருவரையில் இறைவனின் சிலை இல்லாமல், தீ ஜுவாலையே இறைவனாக இருக்கும்.

3. பாண்டவர்கள் முதல்முதலாக கட்டிய கோவில்.

4. தேவியே ஒளி வடிவமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

5. சக்தியின் நாக்கு பகுதி விழுந்த இடமாக வணங்கப்படுகிறது.

6. அணையா விளக்காக இந்த தீபம் ஒளிபிழம்பாக நான்கு இடங்களில் அமைந்துள்ளன. இரண்டு இடங்களில் 6 முதல் 8 இன்ஞ் உயரத்தில் ஒளி வீசுகிறது. மற்றொரு இடத்தில் இரண்டு ஒளி பிழம்புகள் உள்ளன. அருகிலேயே எண்ணெய் போன்ற திரவம் இயற்கையாகவே சுரக்கிறது.

7. நவராத்திரி திருநாளில் உலகளவில் பல பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

பயண அனுபவம்.

நாங்கள் கோவிலுக்கு மிக அருகில் தங்கியிருந்ததால். அதிகாலையிலேயே தரிசனத்திற்;கு தாயாரானோம். காலை 6 மணிக்கு தரிசன வரிசையில் நின்று மிக எளிமையாக சாமி தரிசனம் செய்தோம். பின் எங்களின் காலை உணவை முடித்துக்கொண்டு, 9 மணிக்கு பகலாமுகி தேவிதரிசனத்திற்காக பயணப்பட்டோம்.

Photos and videos




































No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...