நைனா தேவி தரிசன நாள் (25.10.2025)
அமைவிடம்
ஹிமாச்சல் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஷிவாலிக் மலைதொடரில் அமைந்துள்ளது.
சிறப்பு செய்திகள்
1.கடல் மட்டத்திலிருந்து, 1100 மீட்டர் உயரத்தில் உள்ளது.
2. சதிதேவியின் கண்கள் விழுந்த இடமாக நம்பப்படுகிறது.
3. பல நூற்றாண்டுகள் பழமையான அரச மரம் உள்ளது.
4. நைனாதேவியின் குகை ஒன்று அமைந்துள்ளது.
5. ரோப்காரில் பயணித்த பிறகு, குறைந்தது ஒன்றறை கி.மீ. (படிகளில்) நடந்து செல்ல வேண்டும். டோலி வசதியும் உள்ளது.
6. கருவரையில் மூன்று முக்கிய சிலைகள் உள்ளன. அவையாவன காளி தேவி, நைனாதேவி மற்றும் வினாயகர்.
நைனாதேவி குகை.
ரோப்காரில் பயணித்தவுடன், அதன் அருகிலேயே இந்த குகை அமைந்துள்ளது.
நைனாதேவி என்ற சக்தி பீடம் நைனிதால் என்ற இடத்திலும் அமைந்துள்ளது. லோகமாதாவின் ஒரு கண் இங்கேயும், மற்றொரு கண், நைனிதால் ஏரியில் விழுந்ததாக தெரிகிறது.
பயண அனுபவம்.
நாங்கள் பஞ்குலா திருமண நிகழ்வுக்கு பிறகு பிரத்யேகமாக ஒரு கார் அமர்திக்கொண்டு, 25 ஆம் தேதி காலை முதல் 28 மாலை வரை ஐந்து தேவி கோவில்கள் மற்றும் தரம்சலா நகரசுற்று முடிந்து சண்டிகர் நகரம் வரை செல்ல முடிவு செய்து பயணித்தோம். முதல் தரிசனம் நைனாதேவி.
Photos and Videos.
No comments:
Post a Comment