மஸ்ரூர் ராக் கட் மந்திர். (நாள்-28.10.2025)
அமைவிடம்
ஹிமாசல் மாநிலம் பியாஸ் நதிகரையில், காங்கரா பள்ளத்தாக்கில் உள்ள மஸ்ரூர் என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு கற்கோவில். கங்கராவிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
அடிப்படை செய்திகள்
எட்டாம் நூற்றாண்டில் நாகரா கட்டிட கலை பாணியில் வெட்டப்பட்ட ஒரு இந்து கோவில். தொல்லியல் ஆராய்சியாளர்கள் , பெரிய திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த கற்கோவில், பாதியிலேயே முடிவடைந்ததாக கூறுகின்றனர். இந்த ஊரில் இருந்த பல கலை பொக்கிஷங்கள். பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 1913 ஆம் ஆண்டு ஹென்றி ஷட்டில் வொர்த் என்பவர் தொல் பொருள் ஆராய்சியாளர்கள் கவனத்திற்க்கு கொண்டு வந்தார். 1915-ல் தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த கோவில் மும்பை-யானை குகையையும், கம்போடியா- அங்கோர்வாட் கோவிலையும், மகாபலிபுரம்- கற்கோவிலையும் ஓப்பிட வைக்கிறது.
பயண அனுபவம்.
நாங்கள் எங்களின் மூன்று நாட்கள் (25 -28 )பயணத்தை முடித்துக்கொண்டு 28 ஆம் தேதி காலை தரம்சலாவிலிருந்து சண்டிகர் பயணம் செய்ய தொடங்கினோம். நாங்கள் கார் பேசியிருந்ததும் இவ்வாறே. எனக்கு என்னவோ 240 கி;மீ. ஐந்தரை மணி நேரம் பயணம் செய்கிறோம். போகும் வழிதிடத்தில் உள்ள ஒரு சில இடங்களையாவது பார்க வேண்டும் என்று எண்ணி நான் கூகுளில் தேடி இரண்டு இடத்தை தேர்வு செய்து எங்கள் ஓட்டுனரிம் கூறினேன். அவற்றில் 1. மஸ்ரூர் ராக்கட் டெம்பிள் 2. ஆனந்தபூர் சாகிப் குருத்வார். இந்த இரண்டு இடங்களையும் பார்து விட்டு இரவு 7 மணிக்கு நாங்கள் முன்பதிவு செய்திருந்த இடத்தை சண்டிகரில் சென்றடைந்தோம்.
Photos and Videos.
No comments:
Post a Comment