மானசா தேவி (தரிசனநாள்-24 10.2025)
அமைவிடம்
ஹரியானா மாநிலம் பஞ்குலா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த பஞ்குலா என்பது சண்டிகர் நகரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஹிமாசல் தேவி தரிசனம் அறிவோம்.
ஹிமச்சல் மாநில சுற்றுலாவை மூன்று பிரிவாக பிரித்து சுற்றுலா மேற்கொள்ளலாம். இன்ப சுற்றுலா மற்றும் தேவி தரிசனம். சிவ தரிசனம். .
குல்லு மன்னாலி சிம்லா போன்ற இடங்களுக்கு நாங்கள் 2005 ஆம் ஆண்டு சுற்றுலாவாக சென்றுள்ளோம். இந்த ஒன்பது தேவி தரிசனம் என்ற தகவலை கடந்த பிப்ரவரி மாதம் தான் நான் அறிந்தேன். இதில் ஒன்பது என்ற எண்ணிக்கையில் ஹரியானா மாநிலத்தில் தொடங்கி ஜம்முவில் முடிகிறது. பிப்ரவரி மாதத்திலிருந்து நான் இந்த தரிசனத்திற்கான முயற்சியை தொடங்கினேன். அப்பொழுதுதான் தேவிக்கு இணையாக தேவனின் (சிவபெருமான்) கோவில்களும் உள்ளன என்று அறிந்துக்கொண்டேன். தரம்சலா ஸ்பிதிவேலி என்ற புத்த மடாலயங்களும் சிறப்புற்று விளங்குகின்றன. இந்த 14 நாட்கள் பயணத்தில் நாங்கள் ஏழு தேவிகளை தரிசனம் செய்தோம். எங்களின் விருப்பத்திற்கினங்க நாங்கள் மீண்டும் இரண்டுமுறை ஹிமாசல் பயண செய்ய முடிவெடுத்துள்ளோம்.
மானசா (எ)மனசா தேவி.
சிவாலிக் மலை தொடரில் அமைந்துள்ள இந்த கோவில் கோபால்தாஸ் சிங் என்ற அரசரால் 1783 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பஞ்குலா என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த தேவி கோவில் 100 ஏக்கர் நிலபரப்பளவில் உள்ளது.
மானசா (எ)மனசா தேவி.
சிவாலிக் மலை தொடரில் அமைந்துள்ள இந்த கோவில் கோபால்தாஸ் சிங் என்ற அரசரால் 1783 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பஞ்சுலா என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த தேவி கோவில் 100 ஏக்கர் நிலபரப்பளவில் உள்ளது.
பயண அனுபவம்.
குருஷேத்திரத்திலிருந்து நாங்கள் இந்த பஞ்குலாவுக்கு பயண பதிவு செய்யவில்லை. இந்த பஞ்குலா என்ற இடத்தில் தான் எங்கள் உறவினரின் திருமணமும் நடை பெற்றது. நாங்கள் பேருந்து பிடித்து சண்டிகர் சென்று அங்கிருந்து Cab பிடித்து செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தோம். குருஷேத்திரத்திலிருந்து சண்டிகருக்கு நேரடியாக பேருந்து கிடையாது. சண்டிகர் செல்லும் பேருந்துக்கள் குருஷேததிரம் வழியாக செல்லும் என்பதை அறிந்து. பேருந்தின் கூட்டத்தை உணர்ந்து. மீண்டும் ஒரு வாடகை கார் பிடித்து பஞ்குலா திருமண மண்டபத்திற்கு சென்றோம். திருமண மூகூர்தம் முடிவடைந்தவுடன் இந்த தேவியை தரிசிக்க சென்றோம்.
Photos













No comments:
Post a Comment