காங்ரா கோட்டை ( நாள்- 26.5.2025)
ஹிமாச்சல் மாநிலம் காங்ரா என்ற நகரில் ஒரு கோட்டை அமைந்துள்ளது. நாங்கள் எங்களின் அன்றைய நிறைவு இடமாக இந்த கோட்டையை சுற்றிபார்க முடிவெடுத்து சென்றோம்.
கோட்டை வரலாறு
மகாபாரத காலத்திலிருந்த திரிகர்த்த ராஜியம் இவர்களால் அறியப்பட்டதே இந்த காங்கரா நகரம். ராஜபுத்ர குடும்பத்தினரால் கட்டப்பட்ட, இந்தியாவின் மிக பழமையான கோட்டை இந்த கோட்டை. 1009-ல் கஜினி முகமது, 1360-ல் பெரோஸ் ஷா துக்ளக், 1540-ல் சேர் ஷா என்று மூன்று முகமதிய அரசர்களால் தொடர்ந்து கைபற்றப்பட்ட கோட்டை. 1789-ல் ராஜா இரண்டாம் ஷன்சார் சந் என்பவர் மீண்டும் அவரின் மூதாதையர்களின் கோட்டையை கைபற்றினார். பின் ஆங்கிலேயர்களால் கைபற்றப்பட்டது. 1905-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்த கோட்டை மிகவும் பாதிப்படைந்து, புனரமைக்கப்பட்டது.
பயண அனுபவம்
ஹரியானா மாநிலம் போன்று இங்கும் நுழைவுக்கட்டணம் அனைத்தும் ஆன்லைனில்தான் வாங்க வேண்டும். நாங்களும் இணையம் வழியாகவே நுழைவுக்கட்டணத்தை பெற்றோம். கோட்டை அதிக கூட்டமில்லாமல், மிக நன்றாகயிருந்தது. சில இறைசன்னதிகளும், சமண சன்னதியுமிருந்தது. பெரும்பாலான பகுதி அழிவு நிலையில்லிருந்தது. நாங்கள் இரண்டு மணிநேரம் இந்த கோட்டையில் செலவிட்டோம். இரவு 7மணிக்கு தரம்சலா நகரம் வந்தடைந்தோம்.
Photos and videos
No comments:
Post a Comment