சிந்பூரணி

 சிந்பூரணி தரிசனநாள் (25.10.2025)

அமைவிடம்

ஹிமாசல் மாநிலம், உனா என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல் மடத்திலிருந்து 3200 அடி உயரத்தில் இந்த சக்தி பீடம் அமைந்துள்ளது. மேற்கு ஹிமாலையபகுதியின், சிவாலிக்மலை தொடரின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. 

கோவில் சிறப்புகள்.

சக்தி தேவியின் தலைபாகம் விழுந்த இடம் குறிப்பாக நெற்றி பகுதி விழுந்த இடம் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த சக்தி சின்த்பூரணியை ருத்ர மகாதேவ் நான்கு திசைகளிலும் பாதுகாக்கிறார். கிழக்கில் காலேஷ்வர் மகாதேவ், மேற்கில் நாராயண மகாதேவ், வடக்கில் முச்குந் மகாதேவ், தெற்கில் சிவன்பாரி  என்று நான்கு சிவாலயங்கள் உள்ளன. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த நான்கு சிவாலயங்களும் சம அளவிலான தூரத்தில் அமைந்துள்ளனவாம். (ஹர ஹர மகாதேவா) இதன் அடிப்படையிலேயே நாங்கள் ஈஸ்வரன் வழிபாட்டிற்காக மட்டும் மீண்டும் ஹிமாசல் பயணிக்க திட்டமிட்டுள்ளோம்.

பயண அனுபவம்

23 மூன்றாம் தேதி எங்களின் திட்டப்படி நைனாதேவி மற்றும் சிந்பூரணியை தரிசனம் செய்து விட்டு அன்று இரவு ஜுவாலாமுகியில்  தங்க வேண்டும் என்பதே. சிந்பூரணியில் தரிசனம் செய்ய நான்கு மணிநேரத்திற்குமேல், ஆனது. வாரஇறுதிநாள் காரணமாகயிருக்கலாம் என்று நாங்கள் எண்ணினோம். இரவு ஜுவாலாமுகி சென்று தங்கும் அறை தேடி(ஜுவாலாமுகி மற்றும் தரம்சலாவில் அறை  முன்பதிவு செய்யாமல் அங்கு சென்றே பதிவு செய்தோம்) நாங்கள் உறக்கத்திற்கு செல்ல இரவு 11 மணியை கடந்துசென்றோம்.  நைனாதேவி மற்றும் சின்பூரணியை தரிசனம் செய்ய சீக்கியர்களின் வருகை மிக அதிகமாகயிருந்தது. 

Photes and videos.


















No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...