ஆகாயநடைபாதை (Sky Walk)



ஆகாயநடைபாதை

 திருமணத்திற்கு பின் சென்னையில் மேற்கு மாபலத்தில் Lakeview சாலையில் எங்களின் வாழ்கை பயணம் துவங்கியது. மேற்கு மாம்பலம் ரயில்நிலையத்தின் ஒரு பக்கம் மாம்பலம் என்றும் மற்றொரு பக்கம் தியாகராயநகர் என்றும் அழைக்கபப்படுகிறது. நாங்கள் சென்னையின் பிறபகுதிகளுக்கு செல்லவேண்டும் என்றாலும் காய்கறிகள், பழங்கள் வாங்க வேண்டும் என்றாலும் இந்த திகராயநகர் பக்கம் செல்வோம். மாலை நேரங்களில் மட்டுமே மாம்பலம் பக்கம் காய்கறிகள் கிடைக்கும். Border Road வழியாக மேட்லி சாலையை (Bus terminal) நாங்கள் அடைவதற்குள் பல இன்னலல்களை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக அங்குதான் காய்கறி மற்றும் பழ மண்டியிருக்கும். (மொத்தவியாபாரம்) அதன் காரணமாக எந்தநேரமும் கூட்டநெரிசலும் சாலையில் அதிககுப்பபைகளும் நிறைந்நு காணப்படும். எனக்கு இந்தயிடத்தில் நடக்கவே புடிக்காது. நான் திருமணம்வரை கிராமத்தில் வளர்ந்தேன். அதுமட்டுமல்லாது கடைக்கு செல்லும் வாய்ப்பே எனக்குயிருந்ததில்லை. என்னுடையதந்தை என்னை வெளியில் அனுப்பியதேகிடையாது (பள்ளி மற்றும் கல்லூரியை தவிர) அதன் காரணமாகவும் எனக்குயிந்தயிடதில் நடப்பது என்பது மிகவும் கோபத்தையும் எரிச்சலையும் உண்டு செய்யும். குறிப்பாக மழைகாலங்களில் வார்தைகளால் துன்பத்தை சொல்ல முடியாது. கல்யாணம் செய்துகொள்ளளாமல் பெற்றோர்வுடனேயே இருந்திருக்கலாம் என்று நினைக்கும் வகையில் எனக்கு, இங்கு நடப்பது துன்பத்தை கொடுத்தது. அந்த நேரங்களில் நான் இங்கு ஒரு மாடி அமைத்து அதன் வழியாக கூட்டமேயில்லாமல் சென்றால் எவ்வளவு நன்றாகயிருக்கும் என்று நினைத்து கொள்வேன். என்னுடைய வாழ்கை பயணத்தில் பல skywalk களில் நடந்தாலும், இந்தயிடத்தில் நடப்பது எனக்கு மகிழ்சியையும் நான் நினைத்தது நடந்த ஆச்சர்யத்தையுமே கொடுக்கிறது.

சென்னை மேற்குமாம்பலம் ரயில்நிலையதிலிருந்து பேருந்து நிலையம் வரை உள்ள ஆகாயநடைபாதையில் செல்ல வேண்டிய சூழல் தற்சமயம் ஏற்பட்டது. செல்லும் நேரத்தில் என்னுடைய கனவு நினைவாகிய நிலை என்னை ஆச்சர்யத்தில் ஆழத் தியது. என் நினைவலையாகயிந்த வலைபதிவு.

( Railway Border Rode புகைப்படங்கள் ஆகாயநடைபாதையிலிருந்து)











சாந்தினிகேதன்

  சாந்தினிகேதன் (கட்டுரை) 




கல்காத்தாவிலிருந்து 152 கி.மீ. தொலைவில் பிரம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சாந்தினிகேதன். 1863 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கல்விகூடம், 2023 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் பாரம்பரியமாக சின்னமாக அறிவிக்கப்பட்டது.  

தத்துவஞானியும், மதசீர்திருத்தவாதியுமான தேபேந்ரநாத்தாகூர் என்பவரால் உருவாக்கப்பட்டதுயிந்த குருகுல கல்வி மையமான சாந்தினிகேதன்.

1863 ஆம் ஆண்டு 20 ஏக்கர் நிலத்தை பூமன் சின்ஹா என்பவரிடம் குத்தகைக்கு   எடுத்து இந்த இடத்தை சாந்தினிகேதன் என்று பெயரிட்டடார். அமைதியின் பிறப்பிடம் என்பதே இதன் பொருள்.

போல்பூர் என்று அழைக்கப்பட்டயிந்தயிடம், சாந்தினிகேதனால் நன்கு வளர்ந்துவர ஆரம்பித்தது. ஏழுஇலைமரம் என்ற மரத்தின் அருகில் தேபேந்திரநாத்தாகூர் அவர் ஒரு தியான மண்டபத்தை உருவாக்கினார். இந்த மண்டபத்தின் பெயர் “உபாசனாகிருகா”இந்த தியானமண்டபம் ஓடு கொண்டு கூரை அமைத்து, மார்பல் கொண்டு தரை தளம் அமைத்து, பெல்ஜியம் கண்ணாடியால் சுவர் அமைத்ததன் காரணமாக, இந்த தியான மண்டபம் அனைவரையும் கவர்திழுத்தது. இதன் பிறகு தேபேந்ரநாத்தின் மகனும், நோபல் பரிசு பெற்ற ரபீந்தநாத் தாகூர் அவர்களால் இந்த சாந்தினிகேதன் மேம்படுத்தப்பட்டது. 1873 ஆம் ஆண்டு ரபிPந்;ரநாத்தாகூரின் 12 வது வயதில், ஹிமாலயா போகும் சமயம் சாந்தினிகேதனுக்கு முதன் முதலாக வருகை புரிந்தார்.

1901 முதல் 1925 வரை ரபீந்திரநாத் தாகூர் இந்த சாந்தினிகேதனை பிரம்மச்சர்ய ஆசிரமமாக வழிநடத்தினார்.  ஐந்து மாணவர்கள் மட்டுமே பயின்றனர். குருகுல கல்வி போன்றேயியங்கியது. ஆசிரியர்களுடன் மாணவர்கள் இணக்கமாக, அவர்களது வளர்பாகவேயிருந்தனர்.  திறந்தவெளியில் வகுப்பறைகள் இயங்கின. 1925 முதல் “பாதபவனம்”  என்ற பெயரில் குருகுலம்யியங்கியது. 

1913-ல் நோபல் பரிசு ரபீந்திரநாத் தாகூருக்கு கிடைத்தது. அவர் எழுதிய கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக, இந்த பரிசினால் அவர் குடும்பம் பொருளாதாரத்திலும் கௌரவத்திலும் உயர்ந்தது. பெங்கால் தத்துவஞானி மற்றும் பல்துறை அறிஞர் என்று போற்றப்பட்ட ரபீந்தராநாத் தாகூர் அவர்கள், அவர்கள் பெற்ற நோபல் பரிசு என்பது ஆசியா கண்டத்திற்;கே கிடைத்த முதல் பரிசாகும். அதுவரை ஐரோப்பியர்களுக்கு மட்டுமே நோபல் பரிசு கிடைத்துவந்தது. இந்து சீர்திருத்தயியக்கமான பிரம்மசமாஜத்தை தாகூர் அவர்கள்  பின்பற்றியதன் காரணமாக கல்விஅறிவு மற்றும் சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தினார். 

நுன்கலை பிரிவு

ரபீந்தரநாத்தாகூர் அவர்கள் நுன்கலைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், 1919 ஆம் ஆண்டு தனியாக  நுன்கலைபிரிவை ஏற்படுத்தினார். நந்தாலா போஸ் என்பவரே நவீன நுன்கலைக்கு உதவினார்.

ஸ்ரீநிகேதன்

 1922 ஆம் ஆண்டு கிராம மக்களுக்கு ஒரு நிறுவனம் தொடங்கினார். இதுவே ஸ்ரீநிகேதன். சாந்தினிகேத்தனி;லிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது.  இதன் நோக்கம், கிராமக்களை உயர்த்துவது மட்டுமல்லாது அவர்களின் துன்பங்களை போக்குவதும், விவசாயிகளின் கல்வியை முன்நிறுத்தி, அவர்களது உடல்நலம் மற்றும் சமூகநலனை உயர்த்துவது போன்ற  உயர் கொள்கைகளை அடிப்படையாக கொண்டது இந்த ஸ்ரீநிகேதன்.  பாரம்பரிய தொழில், மண்பானை தொழில், தோல் பொருட்கள் கொண்டு செய்யும் பணிகள், பத்திக்;அச்சிடுதல், மரவேலை, பாரம்பரிய கட்டிடங்கள், மற்றும் முக்கிய பாரம்பரிய பதிவுகள் இவற்றை மேம்படுத்துவது மற்றும் பராமரிப்பதுமாகும்.

கலாபவன்

1933 ஆம் ஆண்டு தனிபிரிவாக உருவாக்கப்பட்டது. நடனம், பாட்டு, இசைகருவி பயன்பாடு, நாடகம், கிராமியகலைகள் என்று பலவும் உருவாக்கப்பட்டன.

மொழிபிரிவு

நமது தேசிய மொழிகள் மட்டுமல்லாது பிறநாட்டு மொழிகளுக்குமான பிரிவுகளும் உள்ளது.

விழாக்கள்

பசந்டா – (வசந்தகால உற்சவம்), பார்சா மங்கள் - (மழைக்காலம்) என்ற பருவகாலவிழாக்கள்.

போச் மேளா என்று இந்துக்களின் காலண்டரில் 10வது மாதத்தை  விழாவாக கொண்டாடுகிறார்கள்.

ரபீந்திரநாத்தாகூரின் பிறந்தநாளான மேமாதம் ஏழாம் தேதியை கொண்டாடுகிறார்கள். (நாங்கள் 7.5.2026) அன்று தான் சாந்தினிகேதனுக்க சென்றோம். கொண்டாட்டத்திற்கான அறிகுறியை நாங்கள் காணவில்லை. 

ரபீந்ரநாத்தாகூர் பற்றிய அடிப்படை செய்திகள். 

கவிஞர், தத்துவஞானி, எழுத்தாளர், இசையமைப்பாளர், கல்வியாளர் என்ற பன்முக திறமையாளராகயிருந்தார். தேவேந்திரநாத்-சாரதாதேவி தம்பதியருக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தார். பலரின் சுயசரிதை மற்றும் வரலாறுகளை சுயமாககற்றார். வானவியல், அறிவியல், சமஸ்கிருதம் ஆகியவற்றை வீட்டிலேயே கற்றார். பட்டப்படிப்பிற்காக அவரின் சகோதரருடன் வெளிநாடு சென்று படிப்பில் ஆர்வமில்லாமல், ஷேக்ஸ்பியர் மற்றும் காளிதாசரின் கவிதைகளை படித்து ஆராய்வதிலேயே கவனம் செலுத்தியதால், 1880 ஆம் ஆண்டு பட்டப்படிபை முடிக்காமலேயே வங்காளத்திற்கு திரும்பினார். 1883 ஆம் ஆண்டு மிருனாலிதேவி சௌத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர்.

தேசியகீதம்

இவர் எழுதிய “ஜனகணமன” என்ற பாடல் நம் பாரதத்தின் தேசிய கீதமாகவும், “அமர்சோனார்” என்ற பாடல் பங்களாதேஷின் தேசியகீதமாகம் உள்ளது. 

தாகூரின் படைப்புகள் 

கோரி ஓ கமல் - கவிதை தொகுப்பு

ராணி ஓ ராணி, விசர்ஜன் - நாடகம்

சொனார் தொரி, கனிகா இவ்வாறு 7 கவிதை தொகுப்புகளை 7 ஆண்டுகளில் எழுதினார்.

பங்கர்ஷன் (பங்களாதேஷ்) என்ற பத்திரிக்கைக்கு ஆசிரியராகயிருந்தார். 

“ஸ்மரன்” என்ற கவிதை தொகுப்பை அவரது மனைவிக்கு அர்ப்பணித்தார்.

1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி  நோய்வாயபட்டிருந்த ரபீந்ரநாத்தாகூர் அவர்கள் கல்கத்தாவில் காலமானார்.




































சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்) ஷண்மதம்.  நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக   இறைவனை வழிபட்டு வந்தனர். 1.கணாபத்யம...