ஆகாயநடைபாதை
திருமணத்திற்கு பின் சென்னையில் மேற்கு மாபலத்தில் Lakeview சாலையில் எங்களின் வாழ்கை பயணம் துவங்கியது. மேற்கு மாம்பலம் ரயில்நிலையத்தின் ஒரு பக்கம் மாம்பலம் என்றும் மற்றொரு பக்கம் தியாகராயநகர் என்றும் அழைக்கபப்படுகிறது. நாங்கள் சென்னையின் பிறபகுதிகளுக்கு செல்லவேண்டும் என்றாலும் காய்கறிகள், பழங்கள் வாங்க வேண்டும் என்றாலும் இந்த திகராயநகர் பக்கம் செல்வோம். மாலை நேரங்களில் மட்டுமே மாம்பலம் பக்கம் காய்கறிகள் கிடைக்கும். Border Road வழியாக மேட்லி சாலையை (Bus terminal) நாங்கள் அடைவதற்குள் பல இன்னலல்களை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக அங்குதான் காய்கறி மற்றும் பழ மண்டியிருக்கும். (மொத்தவியாபாரம்) அதன் காரணமாக எந்தநேரமும் கூட்டநெரிசலும் சாலையில் அதிககுப்பபைகளும் நிறைந்நு காணப்படும். எனக்கு இந்தயிடத்தில் நடக்கவே புடிக்காது. நான் திருமணம்வரை கிராமத்தில் வளர்ந்தேன். அதுமட்டுமல்லாது கடைக்கு செல்லும் வாய்ப்பே எனக்குயிருந்ததில்லை. என்னுடையதந்தை என்னை வெளியில் அனுப்பியதேகிடையாது (பள்ளி மற்றும் கல்லூரியை தவிர) அதன் காரணமாகவும் எனக்குயிந்தயிடதில் நடப்பது என்பது மிகவும் கோபத்தையும் எரிச்சலையும் உண்டு செய்யும். குறிப்பாக மழைகாலங்களில் வார்தைகளால் துன்பத்தை சொல்ல முடியாது. கல்யாணம் செய்துகொள்ளளாமல் பெற்றோர்வுடனேயே இருந்திருக்கலாம் என்று நினைக்கும் வகையில் எனக்கு, இங்கு நடப்பது துன்பத்தை கொடுத்தது. அந்த நேரங்களில் நான் இங்கு ஒரு மாடி அமைத்து அதன் வழியாக கூட்டமேயில்லாமல் சென்றால் எவ்வளவு நன்றாகயிருக்கும் என்று நினைத்து கொள்வேன். என்னுடைய வாழ்கை பயணத்தில் பல skywalk களில் நடந்தாலும், இந்தயிடத்தில் நடப்பது எனக்கு மகிழ்சியையும் நான் நினைத்தது நடந்த ஆச்சர்யத்தையுமே கொடுக்கிறது.
சென்னை மேற்குமாம்பலம் ரயில்நிலையதிலிருந்து பேருந்து நிலையம் வரை உள்ள ஆகாயநடைபாதையில் செல்ல வேண்டிய சூழல் தற்சமயம் ஏற்பட்டது. செல்லும் நேரத்தில் என்னுடைய கனவு நினைவாகிய நிலை என்னை ஆச்சர்யத்தில் ஆழத் தியது. என் நினைவலையாகயிந்த வலைபதிவு.
( Railway Border Rode புகைப்படங்கள் ஆகாயநடைபாதையிலிருந்து)





No comments:
Post a Comment