மஸ்யநாராயணா கோவில் ( தரிசனம்- 8.9.2026)
அமைவிடம்
சென்னை பாண்டிச்சேரி யி.சி.ஆர். சாலையில் உத்தண்டி என்றயிடத்தில் அமைந்துள்ளது.
பெருமாளில் அவதாரங்களில் ஒன்றான மச்சாவதரா கோவிலாகும். சின்மயா மிஷன் இந்த கோவிலை கட்டியுள்ளனர். மேற்கூறையில்லாமல் மச்சவதாரவடிவில் நின்றகோலத்தில் சுமார் 20அடி உயரத்தில் அருள்புரிகிறார். பெருமானை சுற்றி பல தூண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வட்டவடிவில், கோவில் அமைக்கப்படடுள்ளது. கோவில் சுற்று பிரகாரத்தில் கூழாங்கற்கள் கொண்டு நடை பாதை அமைத்தள்ளனர். அதைஒட்டி சிறிய நீர்தேக்கத்தில் பல நீர்வாழ் உயிரினங்களையும் வடித்துள்ளனர். மிகவும் நவீனமயமாக கோவில் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தவுடன், இடதுபக்கம் குதிரை பூட்டிய தேரில் ஆதிசங்கரர் நின்ற கோலத்துடனும், வலது பக்கத்தில் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக, சிறய வடிவில் சிவன் பார்வதி, நாராயணன் லெஷ்மி, மூஷிக வாகனத்தில் விநாயகர் பயணிப்பதுபோன்றும்;, வேல் மயிலுடன் பாலமுருகன், வியாசர் மகாபாரத் கூற விநாயகர் எழுதுவது போன்றும், அஸ்வமேதயாகத்திற்காக சென்ற குதிரையை லவ குசர்கள் கட்டி போட்ட காட்சி, ராமர் லெஷ்மணர், சீதை, அனுமான். என்று பல சிற்பங்களை வடிவமைதுள்ளனர். குழந்தைகளுக்காக என்று குறிப்பிட்டுள்ளதால் சிறிய வடிவில் அமைத்துள்ளனர். இதைதவிர ஆஞ்சநேயர் சிலையும், பெருமாள் தாயாருக்கு வழிபாட்டிற்காக ஒரு சிறிய சன்னதியும் அமைத்துள்ளனர்.
வாய்ப்பு
பாண்டிக்கு நாங்கள் செல்லும் வழியில் இந்தயிடத்தை மட்டும் தேர்ந்தெடுத்து சென்றோம். காலை 7.30 மணிக்கே வெய்யலின் தாக்கம் கடுமையாகயிருந்ததால், கடற்கரை பக்கம் திரும்பிகூட நாங்கள் பார்கவில்லை.



















No comments:
Post a Comment