லிஞ்சன்ஸ்டெயின் Liechtenstein (ஐரோப்பாவில் உள்ள மிகசிறிய நாடுகளில் ஒன்று)
(ஐரோப்பிய சுற்றுபயணம் நாள் (20.4.26 முதல் 30.4.2026வரை)
ஐரோப்பிய நாடுகள் சுற்று பயணமாக நாங்கள் 10 நாட்களுக்கு, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்ட்டிரியா, லின்ஞ்;செயன்;ஸ்டெயின், இத்தாலி, வாட்டிகன் என்ற 9 நாடுகளுக்கு பயணம் செய்தோம். உணவு, நேரம், விசா, தட்பவெப்பநிலை, செலவு, யுரோ, பிராங் போன்றவற்றின் விபரங்களுடன், நிறைவாக, “ஐரோப்பிய சுற்றுபயண அனுபவம்” என்று ஒரு தனி வலைப்பதிவும், சுற்று பயணம் செய்த இடங்களின் பெயர்களில் தனி தனியாக வலைப்பதிவும் வெளியிடுகிறேன்.
நாடுபற்றிய அடிப்படை செய்தி
ஐரோப்பாவின் மையத்தில் அமைந்துள்ள நாடு. தெற்கு பகுதியில் சுவிட்சர்லாந்தும், கிழக்கு மற்றும் வடக்கில் ஆஸ்ட்ரியாவையும் கொண்டது. 160 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நாடு. நாட்டின் தலைநகர் பெயர் வாதுசு, வருமான அடிப்படையில் உலகில் மூன்றாவதுயிடத்தில் உள்ளது. சுற்றியும் ஆல்ப்ஸ் மலை தொடர் கொண்ட மிக எழல்மிக்க நாடு. நான் இதைதான் புலோக சுவர்கம் என்ற சொல்வேன். பண்ணைதான் இவர்களின் பிரதான தொழில். என் ஐரோப்பிய பயணத்தின் மகிழ்வு மன நிறைவடைந்ததுந்தது இந்த நாட்டில் தான். எங்களுடன் பயணித்த ஒருவர், 360 புகைப்பட கருவியில் எடுத்த பதிவை அவரின் அனுமதியுடன் வெளியிடுகிறேன். பார்த்து மகிழுங்கள். நாங்கள் புகைவண்டி அமைப்பிலிருந்த ஒரு வாகனத்தில் சென்றோம். பயணம் மிக அருமையாக குதுகலத்துடன் நிறைவை கொடுத்தது. ஐரோப்பாவின் அழகு லின்ஞ்சஸ்டெயனிலும், ஆஸ்ட்ரியாவும் தான். சுவிஸ் எப்படியோ புகழ் அடைந்துவிட்டது.


















No comments:
Post a Comment