செருகுன்னு அன்னபூர்ணேஸ்வரி (தரிசனம்-10.6.2026)
அமைவிடம்
கண்ணுர் பேருந்துநிலையத்திலிருந்து செருக்கன்ன தாரா என்றயிடத்திற்கு பேருந்தில் சென்று அங்கிருந்து, 2 கி.மீ. கோவிலுக்கு நடந்து சென்றோம்.
10.6 காலை இக்கோவிலுக்கு சென்று மதிய உணவு பிரசாதம் சாப்பிடலாம் என்பதே எங்கள் திட்டம். ஆனால் கன மழைகாரணமாக, நாங்கள் காலை ரூமிலேயேயிருந்துவிட்டோம். (Red Alert வேறு விடுத்திருந்தனர்).
நாங்கள் தங்கியிருந்த விடுதிமுகப்பு மழையில்
மதியம் 3 மணிக்குமேல் கிளம்பி சென்றோம். கிராமியமயமான சாலையில் நடப்பதே சுகமாகயிருந்தது.
கோவில் சிறப்பு
அண்ணப்பூரனியும் கிருஷ்ணரும் பிரதான சன்னதிகளாக உள்ளன. இந்த அண்ணபூரனி விக்ரகமானது கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில். ஒரேவகையான பாறைகளால் கட்டப்பட்ட கோவில். கோவில் முகப்பு. மற்றும் குளம் மிக அழகாககாட்சியளித்தன. எனக்கு தெரிந்து கேரளமாநிலத்தில் நான் கடந்த 10 ஆண்டுகளாக சென்ற வருவதில் தெரிந்தது, அவர்கள் பிளாஸ்டிக் பையை தடை செய்தும் அதை கடைபிடித்தும் வருகின்றனர்.
பயண அனுபவம்.
7.6 அன்று சென்னையிலிருந்து, மங்களுர் விரைவு புகைவண்டியில் கண்ணூர் என்றயிடத்திற்கு பயணித்தோம். கொட்டியூர் என்ற இடத்தில் உள்ள மகாதேவரை தரிசனம் செய்வதற்காக கேரள மாநிலம் பயணித்தோம். மூன்று நாட்கள் கண்ணூரில் தங்கி சிலயிடங்களை சுற்றி பாரத்;தோம். அவையாவன
1. தலசேரி ஒருநாள் சுற்று, 2. தாளிபறம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரா கோவில் 3.கொட்டியூர் மகாதேவர் 4.பரசினிக்கடவு முத்தப்பன் கோவில் 5. செருக்குதாரா அன்னபூரணி 6. கண்ணூர் கோட்டை மற்றும் 7. கண்ணூர் அரக்கு அருங்காட்சியகம் பார்த்து, 12 ஆம் தேதி சென்னை திரும்பினோம். கண்ணூர் ரயில்நிலையதிலிருந்து நாங்கள் தங்கியிருந்தயிடம் 600 மீட்டர்தான். அருகிலேயே பேருந்து நிலையமும்யிருந்ததால். இந்த பயணம் முழுவதும் நாங்கள் பொதுவாகனத்தையே எங்கள் பயணத்திற்;கு பயண்படுத்தினோம். இது மழைகாலம் நன்கு மழைபொழியும் என்பதை அறிந்தே நாங்கள் சென்றோம். ஏனென்றால் கொட்டியூர் மகாதேவர் கோவில் என்பது வைகாசி மாதம் 28 நாட்கள் மட்டும்தான் தரிசனம். அதாவது வருடத்திற்கு 28 நாட்கள் மட்டுமே தரிசனம் செய்யமுடியும் கொட்டியூர் அக்கரை மகாதேவரை. அதிலும் முதல் ஏழு நாட்களுக்கு மகளிருக்கு அனுமதி கிடையாது.




No comments:
Post a Comment