கொட்டியூர் மகாதேவர் -(தரிசனநாள் -8.6.2026)
அமைவிடம்
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கண்ணூர், தலசேரி, கோழிக்கோடு ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகன்றன.
அடிப்படை செய்தி
இந்த தலம் வடகேசரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. கொட்டியூர் என்ற கிரமத்துக்கு அருகில்யிருப்பதால். இந்த ஷேத்ரம் கொட்டியூர் மகாதேவர் என்று அழைக்கப்படுகிறது. இந்தகிராமத்தில் வாவலி என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் இரண்டு கரைகளிலும் கோவில் உள்ளதால், இந்த கோவிலை வேறு படுத்தி காட்ட இக்கரை கொட்டியூர் மற்றும் அக்கரை கொட்டியூர் என்று மக்கள் அழைக்கின்றனர். கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அக்கரை கொட்டியூர் “வைகாசி மதோஸ்தவம்” என்று அழைக்கப்படும் வைகாசி மாத திருவிழா காலத்தில் மட்டுமே தரிசனம் செய்ய முடிகிறது.
இக்கரை கொட்டியூர் கோவிலை வைகாசி மாதம் தவிற பிற நாட்களில் 11 மாதமும் தரிசனம் செய்யலாம். இந்த கோவில் சுற்று சூழல் மிக ரம்யமாக இயற்கை சூழலில் அமைந்துள்ளது. வைகாசி திருவிழா அல்லாத காலத்தில்யிந்தயிடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆவலை தூண்டியது.
இக்கரைகொட்டியூர் மழை
அக்கரை கொட்டியூர்
சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பில் வைகாசிமாதம் 27 நாட்களுக்கு பர்னசாலை அமைத்து (சிறிய குடிசை) அதில் மகாதேவரை வைத்து வழிபடுகின்றனர்.
கோவில் வரலாறு
அக்கரை கொட்டியூர் தட்சன் யாகம் செய்தயிடம். அம்பிகை சிவபெருமானை அவரது தந்தையான தட்சன் அலட்சியம் செய்ததால் யாகதீயில் இறங்கியயிடம். என்று நம்பப்படுகிறது. (இந்தயிடமே சக்தி பீடத்தின் தோற்றம்) பின்னர் சுயம்புவாக கிடைத்த சிவபெருமானை இக்கரைகொட்டியூரில் வைத்து கோவில் கட்டி வழிபடுகின்றனர். அக்கரை கொட்டியூரில் வைகாசி மாதம் 27 நாட்களுக்கு மட்டுமே வழிபடுகின்றனர் இந்த வைகாசி மகோஸ்தவத்தில் திரளான மக்கள் வழிபாட்டிற்கு வருகின்றனர். முதல் 7 நாட்களுக்கு பெண்களுக்கு அனுமதிகிடையாது. பல நூற்றாண்டுகளாக இந்த வைகாசி விழா நடை பெறுகிறது. இதன் காலத்தை கணக்கிடமுடியவில்லை. ஹர ஹர மகாதேவா.
பயண அனுபவம்.
7.6 அன்று சென்னையிலிருந்து, மங்களுர் விரைவு புகைவண்டியில் கண்ணூர் என்றயிடத்திற்கு பயணித்தோம். கொட்டியூர் என்ற இடத்தில் உள்ள மகாதேவரை தரிசனம் செய்வதற்காக கேரள மாநிலம் பயணித்தோம். மூன்று நாட்கள் கண்ணூரில் தங்கி சிலயிடங்களை சுற்றி பாரத்;தோம். அவையாவன
1. தலசேரி ஒருநாள் சுற்று, 2. தளிபறம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரா கோவில் 3.கொட்டியூர் மகாதேவர் 4.பரசினிக்கடவு முத்தப்பன் கோவில் 5. செருக்குதாரா அன்னபூரணி 6.கண்ணூர் கோட்டை மற்றும் 7. கண்ணூர் அரக்கு அருங்காட்சியகம் பார்த்து, 12 ஆம் தேதி சென்னை திரும்பினோம். கண்ணூர் ரயில்நிலையதிலிருந்து நாங்கள் தங்கியிருந்தயிடம் 600 மீட்டர்தான். அருகிலேயே பேருந்து நிலையமும்யிருந்ததால். இந்த பயணம் முழுவதும் நாங்கள் பொதுவாகனத்தையே எங்கள் பயணத்திற்;கு பயண்படுத்தினோம். இது மழைகாலம் நன்கு மழைபொழியும் என்பதை அறிந்தே நாங்கள் சென்றோம். ஏனென்றால் கொட்டியூர் மகாதேவர் கோவில் என்பது வைகாசி மாதம் 28 நாட்கள் மட்டும்தான் தரிசனம். அதாவது வருடத்திற்கு 28 நாட்கள் மட்டுமே தரிசனம் செய்யமுடியும் கொட்டியூர் அக்கரை மகாதேவரை. அதிலும் முதல் ஏழு நாட்களுக்கு மகளிருக்கு அனுமதி கிடையாது.












No comments:
Post a Comment