சூரிச் Zurich (சுவிஸ் தலைநகரம்)
(ஐரோப்பிய சுற்றுபயணம் நாள் (20.4.26 முதல் 30.4.2026வரை)
ஐரோப்பிய நாடுகள் சுற்று பயணமாக நாங்கள் 10 நாட்களுக்கு, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்ட்டிரியா, லினஞ்செயன்ஸ்டெயின், இத்தாலி, வாட்டிகன் என்ற 9 நாடுகளுக்கு பயணம் செய்தோம். உணவு, நேரம், விசா, தட்பவெப்பநிலை, செலவு, யுரோ, பிராங் போன்றவற்றின் விபரங்களுடன், நிறைவாக, “ ஐரோப்பிய சுற்றுபயண அனுபவம்” என்று ஒரு தனி வலைப்பதிவும், சுற்று பயணம் செய்த இடங்களின் பெயர்களில் தனி தனியாக வலைப்பதிவும் வெளியிடுகிறேன்.
டீட்டில்ஸ் மலைசிகரம். Mt. Titlis
பெரும்பான்மையான மக்களின் கனவு சுவிஸ். 24 ஆம் தேதி இரவு நாங்கள் ஸ்விஸ்-ல்; தங்கி காலை 8 மணிக்கு ஆல்ப்ஸ் மலைசிகரத்தின் ஒன்றான டிட்டில்ஸ் சிகரத்திற்க்கு பனி மற்றும் இயற்கை காட்சிக்காக சென்றோம். பிரான்ஸ், சுவிஸ், ஆஸ்ட்ரியா மூன்று நாட்டிலும் குளிர் சற்று அதிகமாவேயிருந்தது. சுவிஸ் மற்றும் ஆஸ்ட்டிரிய இரண்டு நாடுகளும். பள்ளத்தாக்கில் அமைந்துள்ளன. பயணநேரம் சற்று அதிகம்தான். நமது காஷ்மீர் போன்று இரண்டு மூன்று கட்டங்களை கடந்து மலைமீது பனி பார்க்க கொண்டோலாவில் செல்ல வேண்டும். காஷ்மீருக்கும் சுவிட்ஸ்க்கும் பெரிதாக வித்யாசம்யிருப்பதாக எனக்கு தெரியவில்லை.
சூரிச் நகரம்
மதிய உணவிற்க்கு பிறகு சூரிச் நகரம் சென்றோம். பெரும்பாலான பயணிகள் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்றனர். நாங்கள் நகர சுற்றுக்கு சென்றோம்.
டெர்லோவி லயன்.
சுவிஸ்-ன்; புகழ் பெற்ற ஒரு போர் நினைவுசின்னம். பிரஞ்புரட்ச்சியின் சமயம் போர் நடந்தயிடம்.







































No comments:
Post a Comment