கண்ணூர் கோட்டை மற்றும் அருங்காட்சியகம். (நாள்-10.6.2026)
அமைவிடம்
கண்ணூர் ரயில்நிலையத்திலிருந்து சுமாராக 4.கி.மீ.தொலைவிலும், அருங்காட்சியகம் 3கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது
கண்ணூர் கோட்டை வரலாறு
போர்சுகீசியர்களால் 1505 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் டச்சுகாரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களும் இந்த கோட்டையை பயன்படுத்திவந்துள்ளனர். தற்சமயம் தொல்லியல் துறை பாதுகாப்பில் சுற்றலாதலமாக விளங்குகிறது. புனித ஏஞ்சலோ கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
அரக்கல் அருங்காட்சியகம்
கேரளத்திலிருந்த ஒரே முகமதிய அரசர் குடும்ப அரண்மனை பொருட்கள் காட்சி படுத்தப்பட்ட அருங்காட்சியகம். அரக்கல் ராயல் டிரஸ்டுக்கு சொந்த மாக உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு வரவில்லை. புகைப்பட அனுமதியில்லை. அன்று மாலை 4 மணிக்கு சென்னை மெயிலில் கண்ணூரிலிருந்து சென்னையை வந்தடைந்தோம்.
பயண அனுபவம்.
7.6 அன்று சென்னையிலிருந்து, மங்களுர் விரைவு புகைவண்டியில் கண்ணூர் என்றயிடத்திற்கு பயணித்தோம். கொட்டியூர் என்ற இடத்தில் உள்ள மகாதேவரை தரிசனம் செய்வதற்காக கேரள மாநிலம் பயணித்தோம். மூன்று நாட்கள் கண்ணூரில் தங்கி சிலயிடங்களை சுற்றி பாரத்;தோம். அவையாவன
1. தலசேரி ஒருநாள் சுற்று, 2. தாளிபறம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரா கோவில் 3.கொட்டியூர் மகாதேவர் 4.பரசினிக்கடவு முத்தப்பன் கோவில் 5. செருக்குதாரா அன்னபூரணி 6.கண்ணூர் கோட்டை மற்றும் 7. கண்ணூர் அரக்கு அருங்காட்சியகம் பார்த்து, 12 ஆம் தேதி சென்னை திரும்பினோம். கண்ணூர் ரயில்நிலையதிலிருந்து நாங்கள் தங்கியிருந்தயிடம் 600 மீட்டர்தான். அருகிலேயே பேருந்து நிலையமும்யிருந்ததால். இந்த பயணம் முழுவதும் நாங்கள் பொதுவாகனத்தையே எங்கள் பயணத்திற்;கு பயண்படுத்தினோம். இது மழைகாலம் நன்கு மழைபொழியும் என்பதை அறிந்தே நாங்கள் சென்றோம். ஏனென்றால் கொட்டியூர் மகாதேவர் கோவில் என்பது வைகாசி மாதம் 28 நாட்கள் மட்டும்தான் தரிசனம். அதாவது வருடத்திற்கு 28 நாட்கள் மட்டுமே தரிசனம் செய்யமுடியும் கொட்டியூர் அக்கரை மகாதேவரை. அதிலும் முதல் ஏழு நாட்களுக்கு மகளிருக்கு அனுமதி கிடையாது.









No comments:
Post a Comment