பிரசில்ஸ் Brussels (பெல்ஜியத்தின் தலைநகரம்)

 பிரசில்ஸ் (பெல்ஜியத்தின் தலைநகரம்) 

(ஐரோப்பிய சுற்றுபயணம் நாள் (20.4.26 முதல் 30.4.2026வரை)




 ஐரோப்பிய நாடுகள் சுற்று பயணமாக நாங்கள் 10 நாட்களுக்கு, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்ட்டிரியா, லினஞ்;செயன்;ஸ்டெயின், இத்தாலி, வாட்டிகன் என்ற 9 நாடுகளுக்கு பயணம் செய்தோம். உணவு, நேரம், விசா, தட்பவெப்பநிலை, செலவு, யுரோ, பிராங் போன்றவற்றின் விபரங்களுடன், நிறைவாக, “ஐரோப்பிய சுற்றுபயண அனுபவம்” என்று ஒரு தனி வலைப்பதிவும், சுற்று பயணம் செய்த இடங்களின்   பெயர்களில் தனி தனியாக வலைப்பதிவும் வெளியிடுகிறேன். 

22 ஆம் தேதி  காலை நாங்கள் பிரத்தியேகமாக ஜரோப்பாவில் அமர்தப்பட்ட பேருந்தில், பாரிஸ் நகரத்திலிருந்து ஆம்ஸ்டர்டாம் புறப்போட்டம் போகும் வழியில் பிரசல்ஸ்  என்ற இடத்தில் சிலயிடங்களை சுற்றிபார்த்தோம். 

அட்டோமியம் (Atomium)

இரும்பு துகளின் அனுவடிவமே (மைக்ரோ சைஸ்) இந்த அட்டோமியம். பிரெஞ்சு உலக விழாவுக்காக 1958 ஆம் ஆண்டு  உருவாக்கப்பட்டது. இந்த விழா “எக்ஸ்போ58” என்ற அழைக்கப்பட்டது. தற்சமயம் இந்த இடம் சுற்றுலாதலமாக மாற்றியுள்ளனர். ஆனால் பார்பதற்கு பிரமிப்போ அல்லது குதுகலத்தையோ எனக்கு ஏற்படுத்தவில்லை. ஆனால் பெல்ஜியம், இயற்கைஎழில்மிக்க நாடாகயிருந்தது.  











கிரண்ட் பிளேஸ்  Grand Place

இந்தயிடம் பிரசல்ஸின் கடைதெருக்கள் நிறைந்தயிடம். பலவகையான பொட்களும் கிடைக்கின்றன. குறிப்பாக சாலெட்டும்;, கேக்குகளும் மிகுந்து காணப்பட்டன. நாங்கள் இந்த கடைத்தெருக்களை சுற்றிப்பார்த்தோம். சாக்லெட்டுகளை சுவைத்தும்  பார்த்தோம். விலை மிக அதிகம். 100கி. சாக்லெட், 3.8யுரோ. இந்த கட்டிடங்கள் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. பெல்ஜியம் நாட்டின் சிறந்த சுற்றலாதலம். 1998 முதல் யுனஸ்கோவின் பாரம்பரியமாக உள்ளது. இந்தயிடம் என்னனை மிகவும் கவர்ந்தது. கலைணுக்கத்துடனான கட்டிட கலை மிகவும் என்னை கவர்ந்தது. 












 


மனிகென் பிஸ் ஸ்
டாச்சு Manneken Pis Statue

சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற சிலை.  ஒரு செல்வந்தர் அவரின் மகனை இந்த கடைத்தெருவுக்கு அழைத்து வந்த சமயம் கூட்டத்தில் குழந்தை தொலைந்துவிட்டதாகவும், அந்த செல்வந்தர் அவன் எப்படி கிடைகரானோ அதே நிலையில்  ஒரு சிலை வைப்பதாக வேண்டிக்கொண்டாராம். குழந்தை சிறுநீர் கழிக்கும் நிலையில் கிடைத்ததால் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக இணையம் கூறுகிறது. ஆனால் எங்களின் டூர் ஆப்பிரேட்டர், அழிவுக்காக வைக்கப்ட்ட வெடிகுண்டு, ஒரு சிறுவனின் சிறுநீரால் அந்த குண்டின் அழிவு தடுக்கப்பட்டு, அதன் நினைவாக உருவாக்கப்பட்ட சிலை என்று தெரிவித்தார். வெங்கலத்தில் செய்தயிந்த சிலை திருடப்பட்டுவிட்டதாம். பின்னர் கண்டுபிடித்து, அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனராம். நாங்கள் பார்தசிலை  நகல். இரவு நாங்கள் ஆம்ஸ்டெர்டாம் சென்றடைந்தோம்.













No comments:

Post a Comment

சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்) ஷண்மதம்.  நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக   இறைவனை வழிபட்டு வந்தனர். 1.கணாபத்யம...