தட்சினேஸ்வர் காளி (தரிசனம் 6.5.2026)
அமைவிடம்
கல்கத்தாவில் தட்சினேஸ்வரர் என்ற ரயில் நிலையம், அருகில் அமைந்துள்ளது. தட்சினேஸ்வர் என்ற மெட்ரோ நிலையத்திலருந்து ஸ்கைவாக் மூலம் கோவிலுக்கே சென்றுவிடலாம்.
ராமகிருஷ்ணபரமஹம்சர், பூஜை செய்த காளி. இவரின் பக்தி மிகுதியால் காளியின் தரிசனமும் கிடைக்கப்பெற்றார். கங்கைகரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு நாங்கள் சென்ற சமயம் பேலூரில் உள்ள ராமகிருஷ்ணர் மடத்திற்கு சென்றவிட்டு, கங்கையை படகில் கடந்து இந்த காளியை தரிசனம் செய்தோம். இப்பொழுது இந்தஇடத்திற்கு மெட்ரோ ரயில்நிலையமும் வந்துவிட்டது.
நாங்கள் காலை யு.எஸ்.விசா நேர்காணலுக்கு சென்றதால், மதியஉணவிற்கு பிறகு சென்று காளியை மட்டும் தரிசனம் செய்தோம் மாலை 4 மணிக்கு ராமிகிருஷ்ணமடம் மூடிவிடுவர். இறைவன் அருளால் விசாவும் கிடைக்கப்பெற்றோம்.
கோவில் வரலாறு
1847 ல் ராணிராஷ்மோணி அவரது வேளையாட்களுடன் கங்கையில் 24 படகுகளை கொண்டு காசிக்கு செல்ல திட்டமிட்டார். அவர்களது கனவில்தோன்றிய இறைவன் காசிக்கு செல்ல வேண்டாம். இந்த ஆற்றங்கரையில்; காளி ஒரு கோவில் கட்டி வழிபாடு நடத்த ஆணையிட்டாராம். 1847-ல் தொடங்கி 1855 -ல் கட்டுமான பணி நிறைவுபெற்றது. இக்கோவிலின் அர்சகர் ஒர்ஆண்டு நிறைவடைந்தவுடனேயே இறந்துவிடுகிறார். இந்த அர்சகர் பணி அவரின் தம்பி;யான ராமகிருஷ்ணபரமஹம்சருக்கு வழங்கப்படுகிறது. அவரது இறப்புவரை 30 ஆண்டுகள் பூஜித்து இக்கோவில் புகழுக்கு காரணமாகினார். சிவனுக்கு பன்னிரண்டு சிறிய சன்னிதானங்கள் உள்ளன. அவற்றிற்கு நேரே காளி சன்னிதானம் உள்ளது. கோவில் உள்ளே செல்போன் அனுமதியில்லை.


















No comments:
Post a Comment