காமாக்யா

 காமாக்யா (தரிசனம்- 8.5.2026)











அமைவிடம்

அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ளது

கோவில் வரலாறு

காரோ மலைபகுதியில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில், அழிவுக்கு பின்னர், 1645 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. 51 சக்திபீடங்களில் ஒன்றாகவும், பிரதான நான்கு பீடங்களில் ஒன்றாகவும் உள்ளது. அம்பிகையை வழிபடும் சாக்த பிரிவினரின் வழியில் உள்ளவர்கள் பூஜை செய்யும் ஒரே கோவில் இதுதான். அம்பிகையின் பெண்உருப்பு விழுந்தயிடமாக வணங்கப்படுகிறது.

அம்புபாச்சி மேளா

அஸ்ஸாம் மாநில ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. மிதுன ராசியில் சூரியன் கடக்கும் பொழுதும், பிரம்மபுத்திரா நதியில் ஆற்று வெள்ளபெருக்கு சமயத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதுகாமாக்யா அன்னையின் மாதவிடாய் காலமாகும். இந்த மூன்று நாட்களும் கோவில் வழிபாடு பூஜை எதுவும் கிடையாது. வீடுகளில் கூட தெய்வத்திற்கு நிவேதனம் செய்வதில்லை. புனித நூல்களை படிக்ககூடது, இவ்வாறு பல பழக்கங்கங்களை  பின் பற்றிவருகின்றனர். 

















எங்கள் அனுபவம்

ஆன்லைன் தரிசன பதிவு செய்துகொள்வது நல்லது. நாங்கள் செய்யவில்லை. காலை 9.30 மணிக்குதான் கௌஹாத்திக்கு சென்றோம். பின் கிளம்பி கோவிலுக்கு 11.30 தான் சென்றோம் அன்றைய தரிசன வரிசை முடிந்துவிட்டது என்று, வரிசை கதவை அடைத்துவிட்டனர். 1000ரூ கொடுத்தால் பூஜாரிகள் எங்களை தரிசனத்திறக்கு கூட்டிசெல்வார்கள் என்று தெரியும். ஆனால் எங்கள்யிருவருக்கும் இதில் உடன்பாடுகிடையாது. சிறிது நேரம் பிரகாரத்தில் அமர்ந்து விட்டு, பின்னர் கோவிலுக்குள் சென்றோம்.  எங்களை யாரும் தடுக்கவில்லை, எதுவும் சொல்லவில்லை, 10 அடி தூரம்தான்யிருக்கும் நாங்கள் இறைவனை வழிபட்டோம். இவ்வாறு மூன்றுமுறை சென்றோம். பின்னர் அம்பிகையின் கர்பகிரஹத்தில் பக்கவாட்டில் ஒரு வழியிருந்தது, அதில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் செல்லலாம் நாங்கள் அதுவழியாகவும் சென்று ஒருமுறை வழிபட்டோம். எங்களுக்கு இங்கிருந்த பூஜாரிகள் கையில் பூவும் நெற்றியில் அம்மனின் குங்குமமும் வைத்தனர்.

உமாநந்தர் கோவில்

பிரம்மபுத்ரா ஆற்றின் பீகாக் தீவு பகுதியில் அமைந்துள்ளது. ஆஹொம் மன்னர்  காலத்தில் கட்டப்பட்ட கோவில். மோட்டார் படகுகள் மூலமாகதான்யிக்கோவிலுக்கு செல்ல முடியும். தற்சமயம் ரோப்கபார் உள்ளதாகவும் கூறுகின்றனர். நாங்கள் அனைத்துயிடங்களுக்கும் அஸ்ஸாம் மாநில அரசு மினி பேருந்தில்தான் பயணம்செய்தோம். 9 ஆம் தேதி  காலை 5மணிக்கு கல்கத்தாவை அடைந்து, மாலை 4 மணிக்கு மீண்டும் கொரமண்டல்  வண்டியில் சென்னையை வந்தடைந்தோம். சிவாயநமக.















No comments:

Post a Comment

சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்) ஷண்மதம்.  நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக   இறைவனை வழிபட்டு வந்தனர். 1.கணாபத்யம...