காளிகாட் காளி

 காளிகாட் காளி (தரிசனம்-4.5.2026) (பயணம் 3.5.முதல் 12.5.2026வரை) 



அமைவிடம்

கல்கத்தாவில்,   காளிகாட் என்ற மெட்ரோ ரயில்நிலையம் அருகில் அமைந்துள்ளது. 

நாங்கள் 3 ஆம் தேதி காலை கொரமண்டல் விரைவு வண்டியில் பயணித்து, 4 ஆம் தேதி காலை, 10.30 மணிக்கு கல்கத்தாவையடைந்தோம். தேர்தல் முடிவு காரணமாக கல்கத்தா மிக ஆர்வமாக இயங்கி கொண்டிருந்தது. 

நாங்கள் நிஜாம் பேலஸ் என்ற மத்தியஅரசு ஹாஸ்டலில் தங்கினோம். அங்கிருந்துமூன்று மெட்ரோ ரயில் நிலையம் கடந்தாலே காளிகாட்டை அடைந்து விடலாம் என்பதை நாங்கள் நன்கு அறிந்திருந்ததால் அன்று மாலையே தரிசனம் செய்வது என்று திட்டமிட்டோம். எங்களின் திட்டப்படி, தேர்தல் முடிவு காரணமாக கூட்டமேயில்லாமல், அமைதியாக நிம்மதியாக நம்வீட்டுக்கருகில் உள்ள கோவில் போன்று தரிசனம் செய்தோம்.

கோவில் வரலாறு

ஆதிகங்கை (ஹ{ப்ளி) ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமையான கோவிலாகயிருந்தாலும், குமாரகுப்தா கால நாணயங்கள்  மூலம் அறியப்படுகிறது. மானசிங் அரசர் 16 ஆம் நூற்றாண்டில் கோவிலாக கட்டினார். 1806ல் சபர்ணாராய் சௌத்ரி கோவிலை மேம்படுத்தினார். சந்திரசூடாமணியின் படி தேவியின் கால் பாதம் விழுந்தயிடமாக 51 சக்திபீடங்களில் ஒன்றாகவும், காளிகாபுராணத்தின்படி அம்பிகையின் முகம் விழுந்த நான்கு பிரதான பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. கங்கை வங்ககடலில் கலக்கும்யிடமான சங்காசாகர் என்றயிடத்தில் இருந்த கபில முனிவரை காபாலிகர்கள் தரிசனம் செய்யவந்த சமயம், காபாலிகர்கள் தேவியின் விரல் வடிவகல்லைகண்டு  அமைத்ததேயிந்த கோவில். 

  












No comments:

Post a Comment

சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்) ஷண்மதம்.  நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக   இறைவனை வழிபட்டு வந்தனர். 1.கணாபத்யம...