பாரிஸ் Paris ( பிரான்சின் தலைநகரம்)

 பாரிஸ் ( பிரான்சின் தலைநகரம்)

(ஐரோப்பிய சுற்றுபயணம் நாள் (20.4. முதல் 30.4.2026வரை)







ஐரோப்பிய நாடுகள் சுற்று பயணமாக நாங்கள் 10 நாட்களுக்கு, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்ட்டிரியா, லினஞ்செயன்ஸ்டெயின், இத்தாலி, வாட்டிகன் என்ற 9 நாடுகளுக்கு பயணம் செய்தோம். உணவு, நேரம், விசா, தட்பவெப்பநிலை, செலவு, யுரோ, பிராங் போன்றவற்றின் விபரங்களுடன் நிறைவாக “ஐரோப்பிய சுற்றுபயண அனுபவம்” என்று ஒரு தனி வலைப்பதிவும், சுற்று பயணம் செய்த இடங்களின்   பெயர்களில் தனி தனியாக வலைப்பதிவும் வெளியிடுகிறேன். 

பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிசுக்கு சென்னையிலிருந்து, டெல்லி சென்று அங்கிருந்து பாரிஸ{க்கு பயணித்தோம். எங்களுடன் பயண பதிவு செய்திருந்தவர்களில் 12 நபர்கள் போரின் (ஈரான் -யு.எஸ்.-இஸ்ரேல்) காரணமாக விசா மற்றும் விமான பயணசீட்டு வாங்கிய பிறகு அவர்களின் வருகையை ரத்து செய்தனர். ஒருசிலர் கடைசிநேரத்தில் பயணதிட்டமிட்டும், மீண்டும் பயண சீட்டு வாங்கியும் எங்களுடன் பயணத்தில் இணைந்ததால், 21 ஆம் தேதி காலை நாங்கள் 11 மணிக்குதான் எங்களின் சுற்று பயணத்தை தொடங்கினோம். 9 மணிக்கு நானும் என் கணவரும் பயணத்திற்கு தயாராகிவிட்டதால் நாங்கள்யிருவர் மட்டும் தங்கியிருந்த இடத்தின் அருகில் 2 கி.மீ. நடந்து சென்று சில காட்சிகளை புகைபடம் எடுத்துக்கொண்டோம். (அனுமதியுடன்) இந்த ஒரு மணிநேரத்திலேயே எனக்கு மூக்கு மற்றும் உதடுகள் காய்ந்து வலி மற்றும் புன் ஏற்பட தொடங்கியது. என் முகத்தை மூடிவைக்க வேண்டும் என்ற எச்சரிக்கை எனக்கு ஏற்பட்டது.




பாரிஸ் நகரம் 

நெப்போலியன் வார் மெம்மோரியல் 

நெப்போலியனின் வெற்றியயை கொண்டாட கட்டியதே இந்த நுழைவாயில் போன்ற அமைப்பு. இதை தொடர்ந்து நகரத்தின் பிரதான பகுதிகளை சுற்றி பார்தோம். குறிப்பிட்டயிடத்தில் பேருந்தை நிறுத்திவிடுவர். அவர்கள் சொல்லும் நேரத்திற்குள் நாம் மீண்டும் பேருந்தை வந்தடைய வேண்டும். பாரிஸ் மக்கள் மற்றும் அரசு பாரம்பரியத்தின் மீது மிகவும் அன்பும் கவனமும் வைக்கின்றனர். அதன் காரணமாக கட்டிடத்தில் நாம் செய்யும் சிறிய மாற்றம் கூட அரசின் அனுமதியுடன் அவர்களின் மேற்பார்வையில் செய்கின்றனர். அதன்காரணமக புதிய பானி கட்டிடத்ததை நம்மால் காணமுடியவில்லை. 










பாரிஸ் அருங்காட்சியகம்.

உலக அருங்காட்சியகத்தில் இந்த இடம் முதன்மையிடத்தை பெறுகிறது. இந்த அருங்காட்சியகத்தை முழுமையாக பார்க்க நமக்கு சில நாட்கள் தேவைபடும். ஆனால் நாங்கள் சில மணிநேரத்தில்யிந்தயிடத்தை சுற்றி வந்தோம். குறிப்பாக மோனோலிசா படம்  இந்த படம்  போலியானது என்று எங்களுடன் வந்த சுற்றலாவழிகாட்டி தெரிவித்தார். இந்த சுற்றலதவழிகாட்டி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். பிரான்ஸ்; பல்கலைகழத்தில் ஆராய்சி மாணவராக உள்ளார்.












ஈபிள்டவர்.  Eiffel tower

1887 -1889 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. உலக முதன்மை சுற்றுலாதலங்களில் ஒன்றாக உள்ளது. 1964 முதல் யுனெஸ்கோவின் பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டது. 1083 அடி உயரம். 125 மீட்டர் சதுரவடிவ அடிதளத்ததை கொண்டது. பார்வையாளர்களுக்கு மூன்று நிலைகளாக பிரித்து அனுமதி தருகிறது. நாங்கள் இரண்டாம் நிலைவரை சென்றோம். இதன் சிறப்பு என்னn வன்றால், இதற்கு அடிதளம் கிடையாதாம்.











குரூஸ் பயணம் 

குரூஸ் பயணம் என்றால் பெரிய அளவுpல் உள்ள படகு பயணம். இதன் சிறப்பு பாரிஸ் நகரத்தில், செயின் என்ற ஆறு உள்ளது. இது இந்த நகரத்திறக்கு மிகவும் அழகுசேர்கிறது. இந்த ஆற்றின் முகட்டில் இரண்டு தீவுகள் உள்ளன. இதற்கு இணைப்பு பாலம் அமைத்துள்ளனர். இந்தபடகில் ஒருமணிNநுரம் பயணம் செய்து, இந்த நகரத்தின் அழகு, முக்கியயிடங்கள் மற்றும் கட்டிட கலையை நன்கு ரசிக்க முடிகிறது. பயணம் செய்யும் நேரத்தில் நாம் பார்க்கும் இடங்களின் சிறப்புகள் பற்றி, குரல் பதிவிடுகின்றனர். ( நம் சென்னை கூவத்தையும் நன்கு சுத்தம் செய்து சுற்றுலாதளமாக்களமே என்ற எண்ணம் தோன்றி ஏக்க பெருமூச்சு வந்தது எனக்கு). மாலை 5 மணி என்பதால் குளிரும் காற்றும் மிக அதிகமாகயிருந்தது. ஆனால் இரவு 8 மணிக்குதான் சூரியஅஸ்தமனம் நிகழ்கிறது. ( சூரியன் நன்குயிருந்தாலும் நம் உடலுக்கு உறைக்கவில்லை.


















































No comments:

Post a Comment

சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்) ஷண்மதம்.  நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக   இறைவனை வழிபட்டு வந்தனர். 1.கணாபத்யம...