வெனிஸ் ( Venice) மற்றும் ரோம் (Rome) இத்தாலி (தலைநகரம் ரோம்)

 வெனிஸ் மற்றும் ரோம் (இத்தாலி தலைநகரம் ரோம்)


 





(ஐரோப்பிய சுற்றுபயணம் நாள் (20.4.26 முதல் 30.4.2026வரை)

 ஐரோப்பிய நாடுகள் சுற்று பயணமாக நாங்கள் 10 நாட்களுக்கு, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்ட்டிரியா, லினஞ்;சன்;ஸ்டெயின், இத்தாலி, வாட்டிகன் என்ற 9 நாடுகளுக்கு பயணம் செய்தோம். உணவு, நேரம், விசா, தட்பவெப்பநிலை, செலவு, யுரோ, பிராங் போன்றவற்றின் விபரங்களுடன், நிறைவாக, “ஐரோப்பிய சுற்றபயண அனுபவம்” என்று ஒரு தனி வலைப்பதிவும், சுற்று பயணம் செய்த இடங்களின்   பெயர்களில் தனி தனியாக வலைப்பதிவும் வெளியிடுகிறேன். 

















வெனிஸ் கிரான்டு கால்வாய்( Venice Grand canal)



இத்தாலியில் மட்டும் நாங்கள் வெனிஸ், மற்றும் ரோம் என்றுயிரண்டுநகரங்களை சுற்றி பார்த்தோம். வெனிஸ்   நீர்நிலைக்கு நடுவே உள்ள நகரம், படகில் செல்லும் மக்கள் என்பதை நாம் அனைவருமேயறிவோம். வெனிஸ், புகைபடங்களிலும் வரைபடத்திலும் மிகைபடுத்தியுள்ளனர். இரண்டு தெருக்களுக்குயிடையில் நீர்நிலை சுகாதாரகேடாகதான்யிருக்கும். என்னால் இந்தயிடத்தை மிகவும் ரசிக்கமுடியவில்லை. உண்மையான புகைபடத்தை நான் வெளியிடுகிறேன். அதையும் மிகைபடுத்திய வரை படத்தையும் ஒப்பிட்டுபாருங்கள். ஒரு பெரிய போட்டில் பயணித்து பின்னர், சிறிய படகில் பயணிக்கவேண்டும்;.  நதியின் பெயர் போதி நதி. இந்தகிராண்ட் கால்வாய் போன்று 150 கால்வாய்கள் ஓடுகின்றன். 

ரோம்  (Rome)

ரோமாபுரி, ரோமபேரரசு என்று வரலாற்றில் படித்த கனவுடன் சென்றேன். நாம் தனியாகபயணித்தால் மட்டுமே நன்கு ஆராய்ந்து பலயிடங்களுக்கு செல்லமுடியும்.  மிகவும்பழமையான   பாரம்பரியம்உள்ள ஊர். ஒருசிலயிடங்களே நாங்கள் பார்த்தோம்.









கொலோசியம் Colosseum




பிளவியன் வம்சத்து மூன்று அரசர்கள்  க.பி72-ல் ஆரம்பித்து கி.பி.80 என்று தொடந்து 96-ல் கட்டிமுடித்தனர். உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது.50000 முதல் 80000 வரை மக்கள் அமரகூடியயிடமாக உள்ளது. இந்த நீள் வட்டவடிவ கட்டிடம், ரோமானிய வீரரிகள் அவர்களுக்குள்ளும் மற்றும் விளங்குகளுடனும் போரிடும்யிடம். இதை பார்வையாளர்கள் பார்திருக்கின்றனர். நமக்குயிந்த செய்தி மனசுமையைதான் கொடுத்தது. நாங்கள் உள்ளே சென்றுகூட பார்கவில்லை. ( கால நேர சட்டம் கடுமையாக உள்ளது. மிக நேர்தியாக திட்டமிடவேண்டும். 

ட்ரிவி நீரூற்று Trevi Fountain

அட்வணையிலிருந்தும் நேரமிம்மையின் காரணமாக நாங்கள் பார்கவில்லை. 

ரோமாபுரி தேவாலயம். 


 














தேவாலயத்தின் உள்ளே செல்ல முடியவில்லை. நான் சுற்றி சுற்றி வந்தும் உள்ளே செல்லும் வழியை கண்டறியமுடியவில்லை. சகபயணிகள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. கடைதெருவிலலிருக்கும் பொருட்கள் வாங்குவதிலேயே கவனமாகயிருந்தனர். பாவம் என் கணவர் எனக்காக என்கூட சுற்றி பார்தும,; தேவாலயம் உள்ளே செல்லாதமுடியாத வருத்தத்துடன் திரும்பினேன்.  

இரவு படோவா நகரில் தங்கினோம்.


No comments:

Post a Comment

சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்) ஷண்மதம்.  நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக   இறைவனை வழிபட்டு வந்தனர். 1.கணாபத்யம...