மாயாப்பூர் மற்றும் நவ்தீப்தாம் (தரிசனம்-5.5.2026)
அமைவிடம்
ஹெளராவிலிருந்து கட்வா செல்லும், புகைவண்டியில் ஏறி (உள்ளுர் புகைவண்டி) நவ்தீப்தாம் என்ற ரயில்நிலையத்தில் இறங்கி அங்கிருந்து படகு மூலம் கங்கையாற்றின் அக்கரையில் உள்ள மாயாபூரையடைந்தோம்.
வாய்ப்பு
எங்களுக்கு 6.5. அன்று அமெரிக்க பயணத்திற்கான விசாவுக்கான நேர்முக தேர்வு (கல்கத்தாவில்) யிருந்தது. நாங்கள் சில நேரங்களில் புகைவண்டி தாமதமாக செல்ல வாய்புள்ள காரணத்தால், ஒரு நாள் முன்பே கிளம்பினோம். அதனால் 5ஆம் தேதி எங்களுக்கு முழுமையாக கிடைத்தது.
நவ்தீப்தாம் சைத்தன்யமகாபிரபு
இந்தயிடம் சைத்தன்ய மகாபிரபுவின் ஜென்மதலம் (பிறந்த ஊர்) இவரது காலம் 1486 முதல் 1534 வரை .ஒடிசாவில் வைணவ பக்தி நெறியை பரப்பியவர். பூரி ஜகன்நாதர் மீது மிகுந்த பக்தி கொண்டவர். கௌரங்கன் என்பது அவரது இயற்பெயர். திருமணம் செய்து கொண்டு பின்னர் 25 ஆம் வயதில் இல்வாழ்கையை துறந்தவர். கிருஷ்ணர் என்ற ஹரி மீது மிகுந்த அன்புகொண்டவர். இவர் சடங்குகளிலிருந்து விடு பட்டு ஆடி பாடி உணர்வுபிழம்பாக கண்ணனை வழிபட்டு உலக மாயையிலிருந்து விடுபட்டு இறைவனை அடைந்தார். கௌடிண்யவைணவம் அல்லது சைத்தண்யவைணவம் என்பது இவரது வைணவ பிரிவு. இதுவே ஹரே கிருண்ணாவின் அடிப்படை கொள்கை. இவரின் உருவம் ஆண்போன்றும் பெண்போன்றும்யிருப்பதால், ராதா மற்றும் கிருஷ்ணரின் அம்சமாகவே பக்தர்கள் கருதுகின்றனர். இவருக்கு நவ்தீப்தாமில் கோவில்லுள்ளது.
இஸ்கான் கோவில்
இதன் காரணமாகவே மாயாபூரில் இஸ்கான் கோவில் அமைத்துள்ளனர். இஸ்கான் கோவில்களில்; மிகவும் புகழ்பெற்றது இந்த மாயாபூர் கோவில்.





























No comments:
Post a Comment