பரசின்னிகடவு முத்தப்பன் கோவில்

 பரசின்னிகடவு முத்தப்பன் கோவில் ( தரிசனம்-8.6.2026)

அமைவிடம்

கண்ணூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் வளபட்ணம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோவில்.

கோவில்பற்றிய  அடிப்படை செய்தி.

இறைவன் பெயர் முத்தப்பன். திருவப்பன் மற்றும் வெள்ளாட்டம் என்ற இரண்டு வேடங்களை அணிந்து கொண்டு இருவர் நடனம் ஆடுகின்றனர். நடனம் ஆடும் நேரம் சிவபெருமானே நேரில் வருவதாக மக்கள் முழுமையாக நம்புகின்றனர்.


கூட்டம் மிக அதிகமாகயிருந்ததால் நான் உள்ளே செல்லவில்லை. என் கணவர் மட்டும் இந்த நடனத்தை கண்டு களித்தார். கண்ணூரில் நாங்கள்யிருந்த மூன்று நாட்களில் பேருந்து பெயர்கள,; கடை மற்றும் உணவகங்களின் பெயர்கள,; என்று பெரும்பாலான இடங்களில் முத்தப்பன் என்று பெயர் சூட்டப்பட்டதிலிருந்து இப்பகுதி மக்கள் இந்த இறைவனிடம் கொண்ட நம்பிக்கையை நம்மால் உணரமுடிகிறது. 

முதப்பன் கதை

பிள்ளையில்லாத தம்பதியர், இந்த ஆற்றில் மிதந்து வந்த குழந்தையை வளர்கின்றனர். இந்த குழந்தை இவர்களின் விருப்திற்கிணங்க செயல் புரியாமல், அவன் விருப்பதிற்;கிணங்க செயல் புரிவதால், இந்த வளரப்;பு மனை கைவிட நினைக்கையில், அந்த மகன் பேnhhளியாக தோன்றி தானே சிவபெருமான் என்று கூறுகின்றார். வளப்புதாய் அவரை வணங்கி மோட்சம் அடைகிறார்.

கலையின்மீது நாட்டம் கொண்ட எனக்கு இந்த ஆடை அலங்காரத்தையும் நடனத்தையும் பார்க முடிவில்லை என்ற ஏக்கமே அதிகமாக உள்ளது.

பயண அனுபவம்.

7.6 அன்று சென்னையிலிருந்து, மங்களுர் விரைவு புகைவண்டியில் கண்ணூர் என்றயிடத்திற்கு பயணித்தோம். கொட்டியூர் என்ற இடத்தில் உள்ள மகாதேவரை தரிசனம் செய்வதற்காக கேரள மாநிலம் பயணித்தோம். மூன்று நாட்கள் கண்ணூரில் தங்கி சிலயிடங்களை சுற்றி பாரத்தோம். அவையாவன

1. தலசேரி ஒருநாள் சுற்று, 2. தாளிபறம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரா கோவில் 3.கொட்டியூர் மகாதேவர் 4.பரசினிக்கடவு முத்தப்பன் கோவில் 5. செருக்குதாரா அன்னபூரணி 6.கண்ணூர் கோட்டை மற்றும் 7. கண்ணூர் அரக்கு அருங்காட்சியகம் பார்த்து, 12 ஆம் தேதி சென்னை திரும்பினோம்.  கண்ணூர் ரயில்நிலையதிலிருந்து நாங்கள் தங்கியிருந்தயிடம் 600 மீட்டர்தான். அருகிலேயே பேருந்து நிலையமும்யிருந்ததால். இந்த பயணம் முழுவதும் நாங்கள் பொதுவாகனத்தையே எங்கள் பயணத்திற்;கு பயண்படுத்தினோம். இது மழைகாலம் நன்கு மழைபொழியும் என்பதை அறிந்தே நாங்கள் சென்றோம். ஏனென்றால் கொட்டியூர் மகாதேவர் கோவில் என்பது வைகாசி மாதம் 28 நாட்கள் மட்டும்தான் தரிசனம். அதாவது வருடத்திற்கு 28 நாட்கள் மட்டுமே தரிசனம் செய்யமுடியும் கொட்டியூர் அக்கரை மகாதேவரை. அதிலும் முதல் ஏழு நாட்களுக்கு மகளிருக்கு அனுமதி கிடையாது.   











.







No comments:

Post a Comment

சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்) ஷண்மதம்.  நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக   இறைவனை வழிபட்டு வந்தனர். 1.கணாபத்யம...