தலசேரி ஒருநாள் சுற்று (நாள்-8.6.2026)
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்.
1.ராமசாமி கோவில்
இந்தயிடம் திருவங்காடு என்ற அழைக்கப்படுவதால், திருவங்காடு ராமசாமி கோவில் என்று, புகழ் பெற்று விளங்குககிறது. கேரளாவில் மிகவும் புகழ்பெற்ற நான்கு ஸ்ரீராமர் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். 1. திருப்ரயார், 2. திருவில்லுமலை, 3. கடலூர் என்றயிடங்களிலும் ராமர் கோவில்கள்கள் உள்ளன. ஒரு ஹெக்டேர் நிலபரப்பில், பெரிய குளத்துடன் அமைந்த கோவிலாகும். திப்புசுல்தான் காலபடையெடுப்பில் சில அழிவுகளை எதிர் கொண்ட கோவில்களில் ஒன்றாக உள்ளது. மரசிற்பங்களும், சுவர்ஓவிங்களும் நிறைந்து காணப்படுகிறது. ராமாயணக் காவியத்துடனும்யிந்த இடம் தொடர்புடையாதாக அறியப்படுகிறது. கேரளாவின் சுவர்ஓவியமான மியூரல் மிக சிறப்பாக உள்ளது.
2.ஜெகநாதர் கோவில்
1908 ஆண்டு ஸ்ரீ நாராயணகுருவால் கட்டப்பட்டயிந்த கோவில். பூரி ஜெகன்நாதர் கோவில் போன்றுயிருந்தாலும் இத்தலம் ஒரு சிவன் கோவிலாகும். அனைத்துதரப்பு மக்களும் வழிபட உருவாக்கப்பட்ட சமூக சீர்திருத்த கோவில். கேளா வைக்கம் என்றயிடத்திலும் இவரே சீர்திருத்ததை ஏற்படுத்தினார். ஆனால் தமிழக பாட புத்தகத்தில் ஈ.வே. ராமசாமியை வைக்கம் வீரர் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையான வைக்கம் வீரர், ஸ்ரீநாராயணகுரு அவர்கள்தான். நாராயணகுருவுக்கு தனி சன்னதியும் அவரைபற்றிய காட்சியகமும் அமைத்துள்ளனர்.
3. தலசேரி கோட்டை
1683 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி மலபாரில் ஒரு கிளையை நிறுவியது, அப்போழுது ஒரு ஆங்கிலேயர் இவர்களின் அனுமதியுடன் ஒரு கோட்டையை கட்டினார். இந்த கோட்டை 1776-ல் இவர்களின் நிர்வாகயிடமாக மாறியது. சுதந்திரத்திற்கு பிறகு அரசு அலுவலகமாக இயங்கி வந்தது. 1999 ஆம் ஆண்டு முதல் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் சுற்றலாதலமாக இயங்கி வருகிறது.
கோட்டையில் மழை பொழிவு.
4.ஓடத்தில் பள்ளி
இது ஒரு பள்ளிவாசல், ஆனால் இதன் அமைப்பு கேரள பாரம்பரிய கோவில் கட்டிடமாகயிருந்ததால், நாங்கள் இங்கு சென்றோம். இது ஒரு சிவன் கோவிலென்றும் பின்னர் பள்ளிவாசலாக மாற்றப்பட்டதாக எங்களை பார்த்த சிலர் கூறினர். இதன் கூறை பொன்னால் வேயப்பட்டது. புகைப்படத்தை பகிர்கிறேன். நாங்கள் இந்த பள்ளிவாசலுக்கு சென்று புகைப்படம் எடுத்தோம் எங்களை யாரும் தடுக்கவில்லை.
5.கிரிகெட் மைதானம்
இந்தியாவில் முதன் முதலில்இந்த மைதானத்தில்தான் கிரிகெட் விளையாட்டு விளையாடப்பட்டது.
வேறு சில சிறியயிடங்களையும் பார்த்துவிட்டு கிளம்பினோம். (வாமினி கோவில், கலைமையம்).
பயண அனுபவம்.
7.6 அன்று சென்னையிலிருந்து, மங்களுர் விரைவு புகைவண்டியில் கண்ணூர் என்றயிடத்திற்கு பயணித்தோம். கொட்டியூர் என்ற இடத்தில் உள்ள மகாதேவரை தரிசனம் செய்வதற்காக கேரள மாநிலம் பயணித்தோம். மூன்று நாட்கள் கண்ணூரில் தங்கி சிலயிடங்களை சுற்றி பாரத்தோம். அவையாவன
1. தலசேரி ஒருநாள் சுற்று, 2. தாளிபறம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரா கோவில் 3.கொட்டியூர் மகாதேவர் 4.பரசினிக்கடவு முத்தப்பன் கோவில் 5. செருக்குதாரா அன்னபூரணி 6. கண்ணூர் கோட்டை மற்றும் 7. கண்ணூர் அரக்கு அருங்காட்சியகம் பார்த்து, 11 ஆம் தேதி சென்னை திரும்பினோம். கண்ணூர் ரயில்நிலையதிலிருந்து நாங்கள் தங்கியிருந்தயிடம் 600 மீட்டர்தான். அருகிலேயே பேருந்து நிலையமும்யிருந்ததால். இந்த பயணம் முழுவதும் நாங்கள் பொதுவாகனத்தையே எங்கள் பயணத்திற்கு பயண்படுத்தினோம். இது மழைகாலம் நன்கு மழைபொழியும் என்பதை அறிந்தே நாங்கள் சென்றோம். ஏனென்றால் கொட்டியூர் மகாதேவர் கோவில் என்பது வைகாசி மாதம் 27 நாட்கள் மட்டும்தான் தரிசனம். அதாவது வருடத்திற்கு 27 நாட்கள் மட்டுமே தரிசனம் செய்யமுடியும் கொட்டியூர் அக்கரை மகாதேவரை. அதிலும் முதல் ஏழு நாட்களுக்கு மகளிருக்கு அனுமதி கிடையாது.
































No comments:
Post a Comment