சாந்தினிகேதன். (நாள் 8.5.2026)
அமைவிடம்
கல்கத்தாவிலிருந்து (ஹெளரா) கௌகாத்தி செல்லும் வழிதடத்தில் போல்பூர் என்றயிடத்திறக்கு செல்லவேண்டும். போல்பூர் ரயில்நிலையத்திருந்து ஈ-ரிக்காவில் நாம் அனைத்துயிடங்களையும் சுற்றி பார்கலாம். ஒருநானைக்கு அதாவது 20 யிடங்கள் சாந்தினிகேதனில் சுற்றி பார்க 2500ரூ. ஈ-ரிக்ஷா ஓட்டுனரே கைடாக செயல்பட்டார். மதிய உணவுக்கு நல்ல ஹோட்டல் பரிந்துரைத்தார். மாலை 4.30 மணிக்கு மீண்டும் போல்பூர் ரயில்நிலையத்தில் நம்மை சேர்த்துவிடுகிறார்.
சாந்தினிகேதன்
1862 ஆம் ஆண்டு" விஸ்வபாரதி " என்ற பள்ளிக்கூடம் மற்றும் பல்கலைகழகம் இரவீந்ரநாத்தாகூர் அவர்களால் தொடங்கப்பட்டது. 1952 முதல் இத்தியஅரசு இந்த பல்கலைகழகத்தை நிர்வகித்து வருகிறது.
பயண அனுபவம்
நாங்கள் ஹெளராவிலிருந்து காலை ஏழுமணிக்கு போல்பூருக்கு வந்தேபாரத்தில் பயணித்தோம். ஒன்பது மணிக்கு சாந்தினிகேத்தன் அதாவது போல்பூர் ரயில்நிலையத்தை அடைந்துவிட்டோம். கேதார்நாத் என்ற சிவன் கோவில் மற்றும் ஒரு சக்திபீட கோவில்யிவற்றை போகும் வழியில் பாத்துவிட்டு சாந்தினிகேதனையடைந்தோம்.
நான் புரிந்துகொண்ட சாந்தினிகேதன்.
இது ஒரு சிறிய நகர், இங்க பல பிரிவுகள் உள்ளன. அதாவது பழய பள்ளிஅமைப்பு மற்றும் நடனம், பாட்டு, ஓவியம் போன்ற கலைகளுக்கு தினியிடம், விளையாட்டுமைதானம், மொழிக்காக தனி பிரிவு, விவசாயம் கற்பிக்க விவசாய நிலங்கள் மற்றும் செடி கொடி மற்றும் பூச்செடி வளர்ப்புயிடங்கள் என்று அனைத்துவகையான கல்வி பிரிவுகளுமிருந்தன. ஆனால் சுற்றுலா பயணிகள் உள்ளே அனுமதிகிடையாது. மாணவகள் மட்டுமே செல்லலாம். கோரானா காலம் முதல் பல பிரிவுகள் இயங்காமலே உள்ளது. எங்களை போன்ற சுற்றுலா பயணிகள் நகரின் சாலைவழியாக அனைத்துயிடங்களையும் ஈ-ரிக்ஷாவில், பார்த்துக்கொண்டே சென்றோம். புகைப்படங்கள் மற்றும் கானொளிகளை பகிர்கிறேன். தற்சமயம் மிக சிறப்பாக இயங்குவதாக எனக்கு தெரியவில்லை. நான் தற்சமயம் புனருத்தான் வித்யாபீட மாணவியாகயிருப்பதால், “சாந்தினிகேதன்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடுவேன்.
சிலகோவில்கள், கூட்டுறவு சங்கங்களும்யிங்கு இயங்கிவருகின்றன. நாங்கள் சென்ற அன்று ரபீந்ரநாத்தாகூரில் பிறந்தநாள். ஆனால் அதற்கான அறிகுறியே அங்கு தெரியவில்லை. போல்பூரிலிருந்து இரவு 9 மணிக்கு கௌகாத்தி பயணித்தோம்.






















































No comments:
Post a Comment