திருப்பழனம் (தரிசனம்- 11.9.2025)
அமைவிடம்
தஞ்ஜாவூர் மாவட்டம், திருவையாறு என்ற ஊரிலிருந்து, கிழக்கு பகுதியில், 3 கி;.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்திருத்தலம்.
வாய்ப்பு
நல்லிச்சேரி கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அன்று இரவே நாங்கள், சென்னைக்கு பயணப்பதிவு, செய்திருந்தோம். (இரவு 9.50) கிடைத்த நேரத்தை பயண்படுத்தி, திங்களுர் மற்றும் திருப்பழனம் என்ற சிவத்தலங்களை தரிசனம் செய்தோம்.
கோவில் சிறப்பு
தேவார பாடல் பெற்ற திருத்தலம்.(சோழநாடு காவிரி வடக்கரைதலம்) பெரியநாயகி உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயரில் நமக்கு அருள்பாலிக்கின்றனர். இறைவன் இத்தலத்தில் சுயம்புமூர்த்தியாக உள்ளார். திருவையாறு சப்தஸ்தான தலங்களில் ஒன்று. குபேரன், திருமால், திருமகள், சந்திரன் மற்றும் தர்மசர்மா ஆகியோர் பூஜித்ததலம். அப்பர், சம்மந்தர், சுந்தரர், மற்றும் அப்பூதிஅடிகளால் பாடப்பெற்றது.
“பாங்கார் பழனத்து அழகா போற்றி” –திருவாசகம்.
இறைவனின் திருநாமங்கள் - பழனப்பிரான், ஆபத்சகாயநாதர், அமுதலிங்கேஸ்வரர், பரமேஸ்வரர், பிரயாணபுரீஸ்வரர்.
இத்தல தேவாரம்
வேதமோதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப்
பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா எனநின்று
பாதந்தொழுவார் பாவந் தீர்ப்பார் பழன நகராரே
தல வரலாறு
எமதருமன் துரத்திவருவதை அறிந்த ஒரு சிறுவன் தன்னை காத்துக்கொள்ள இத்தல இறைவனை சரன்அடைகிறான். எமனிடமிருந்து காத்தமையால் இத்தல இறைவன் ஆபத்சகேயேஸ்வரர் என்று பக்தர்களால் வணங்கப்படுகிறார்.
என் அனுபவம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் இத்தலத்தை முதன் முதலில் தரிசனம் செய்தேன். என்னுடைய இளமைபருவத்தில், தஞ்ஜாவூரை சுற்றியுள்ள திருக்காட்டுப்பளளி, திருவையாறு, திருப்பூந்துருத்தி என்று வசித்த நான் பிரம்மாண்டமான இக்கோவிலை எப்படி தரிசனம் செய்யாமலிருந்தேன் என்று, வியந்தேன். என்னுடைய பெற்றோர்கள் பல திருக்கோவில்களுக்கு என்னை அழைத்து சென்றிருக்கின்றனர். மீண்டும் இத்திருத்தலத்தை தரிசனம் செய்து மகிழ்சியடைந்தேன். பிளாக் எழுதுவது இதுவே முதல் முறை.
இத்தல புகைப்படங்கள்.






























No comments:
Post a Comment