அம்பல் பிரம்புரீஸ்வரர் (தரிசனம்-27.1.2026 -காலை)
அமைவிடம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது.
காவிரி தென்கரை தலங்களில் 54வது தலம். சோமாசிமாற நாயனார், பிறந்து, வசித்ததலம்.
கோவில் அமைப்பு
இறைவன் பிரம்புரீஸ்வரர், அம்மன் சுகந்த குந்தலாம்பிகை (எ) பூங்குழலம்மை. என்ற பெயர்களில் இறைவன் அருள்பாலிக்கின்றார். ஞானசம்மந்தர் பாடிய தேவாரம். கோச்செங்கோட்சோழன் கட்டிய மாடக்கோவில், என்ற யானை புகா கோவில். மூன்று நிலைக்கொண்ட ராஜகோபுரம் மற்றும் கொடி மரம், பலிபீடத்தை தொடர்ந்து, சுதையால் உருவாக்கப்பட்ட பெரிய நந்தி உள்ளது. பிராகாரத்தில் படிக்காசு விநாயகர், சோமாசிமாறர், சுசீலா அம்மை, நடராஜர், நவகிரகம், விநாயகர், பாலசுப்ரமணியர், கோச்செங்கோட்சோழன். அப்பர், சம்மந்தர், சூரியன், சந்திரன், என்று பல சன்னதிகள் உள்ளன. மாடக்டகோவில் படிகளில் ஏறி சென்றால், உயர் தளத்தில் மூலவர் பிரம்மபுரீஸ்வரர்.
சோமாசிமாற நாயனார்.
ஆவதார தலம். இவர் தொடந்நு பஞ்சாட்சரமந்திரத்தை ஜபித்தவர். அந்தணர் குலத்தில் பிறந்ததால், தொடர்ந்து வேள்வி செய்து, அதன் பலனை பக்தர்களுக்கு அருளியவர். தொடர் அன்னம் பாலிப்பு (அன்னதானம்) செய்து வந்தார். பின்னர் சுந்தரர் பற்றி கேள்விபட்டு திருவாரூர் சென்று, சுந்தரமூர்திநாயனாருக்கு அடியவராக வாழ்நாளை கழித்தார்.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊ ர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.




















No comments:
Post a Comment