அத்திமுகம் ஐராவதேஸ்வரர்(ம)ஸ்ரீஅழகேஸ்வரர் (தரிசனநாள் -20.1.2026)
அமைவிடம்
கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திமுகம் என்ற ஊரில் அமைந்துள்ள சிவன்கோவில். அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் மற்றும் ஸ்ரீஅழகேஸ்வரர் என்ற சிவன் சன்னிதகளில் இறைவன் நமக்கு அருள்பாலிக்கிறார்.
வரலாறு
திரேதாயுகத்தில் இந்திரனுக்கும் விருத்தி என்ற அசுரனுக்கும் ஏற்பட்ட போரில் இந்திரன் அசுரனை அழிக்கிறார். அதன் காரணமாக இந்திரனுக்கு அவனின் வாகனமான ஐராவதத்திற்கும் (வெள்ளை நிறயானை) பிரம்மகத்திதோஷம் ஏற்படுகிறது. அசுரனை அழித்த பாவத்தை போக்க இத்த தல இறைவனை வணங்கி பாபவிமோசனம் பெற்று இந்திரலோகத்தை அடைகிறார் என்பதுவே புராணம். இத்தல இறைவன் யானை முகத்தை போல் காணப்படுவதால், இறைவன் ஐராவதேஸ்வரர் என்றும், யானை முகம் காரணமாக இந்த ஊர் அத்திமுகம் என்ற பெயர்பெற்றதாக வரலாறு கூறுகிறது.
கோவில் பற்றிய செய்தி
கிழக்குநோக்கிய இந்த கோவில் 15 படிகள் கீழ்யிறங்கிய பிறகு அமைந்துள்ளது. பலிபீடம் கொடிமரம் இதை தொடர்ந்து ஸ்ரீஅழகேஸ்வர் சன்னதி அமைந்துள்ளது. இந்த இறைவன் சோழர் காலத்தில்; கட்டபட்ட கோவில் என்று இக்கோவில் அர்சகர் தெரிவித்தார். கர்பகிரகத்தை சுற்றி ஒரு சிறிய மிக குறுகிய பிரகாரம் அமைந்துள்ளது. அவர் எங்களுக்கு இந்தயிடத்தை திறந்து விட்டார், வலம்வருவதற்காக, மற்ற நேரங்களில் பூட்டிவைக்கப்படுகிறது. பக்தர்களின் நலன் கருதி. ஸ்ரீஅழகேஸ்வரருக்கு நேர் பின் புறம் ஐராவதேஸ்வரர் சன்னதியுள்ள இந்த மண்டபம் பல்லவன்காலத்தில் கட்டப்பட்டதாக கூறினார். கருவறையில் உள்ள சன்னதிகள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன. பிரகார அம்மன் சன்னதி திறந்த விளக்கு போட்டு பலமாதங்களுக்கமேல்யிருக்கும் என்று தோன்றுகிறது. அழகேஸ்வர் மட்டுமே தினம் பூஜிக்கப்படுகிறார். மிக அழிவுநிலையில் கோவில் காணப்பட்டது. கோவிலில் மூன்று மொழிகளில் பெயர்பலகையுள்ளது. கர்நாடக மாநிலை எல்லை காரணமாக கன்னடம், தமிழ், ஆங்கிலம் என்று மூன்று மொழியும் பயன்படுத்தியுள்ளனர். தேவார பாடல்பெற்ற தலங்கள் மற்றும் புகழ்பெற்ற கோவில்கள்மட்டுமல்லாமல் நாங்கள் மிக பழமையான கோவில்களையும் வழிபட்டு வருகிறோம்.
பயண அனுபவம்
20 ஆம் தேதி பெங்களுரிலிருந்து, புதுச்சேரிக்கு பயணம்செய்யும் நேரத்தில் 1.ஐராவதேஸ்வரர் 2. பார்கவநரசிம்மர் என்று இரண்டு ஆலயங்களை வழிபட்டு புதுச்சேரியைஅடைந்தோம்.















No comments:
Post a Comment