திருவாடுதுறை

 திருவாடுதுறை (தரிசனம் -26.1.2026 -மாலை)

அமைவிடம் 

மயிலாடுதுறை மாவட்டம்  திருவாடுதுறை என்றயிடத்தில் இந்த கோமுக்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை -கும்பகோணம் ரயில்வழிபாதையிலுள்ள நரசிங்கன்பேட்டை ரயில்நிலையம் அருகில் அமைந்துள்ளது.  

பாடல் வகைகள்

தேவாரப்படாடல்கள், (நாவுக்கரசர், ஞானசம்மந்தர்) திருமந்திரம், திருவிசைப்பா திருபல்லாண்டு. மாணிக்கவாசகர் ஆகியோர் இத்தல இறைவனை பாடியுள்ளனர். 

கோவில் அமைப்பு

பத்து ஏக்கர் நிலைபரப்பில், ஐந்து நிலை ராஜகோபுரத்துடன், மூன்று ராஜகோபுரம் மற்றும் மூன்று நிலைபிரகாரத்துடன் உள்ள பிரம்மாண்டமான கோவில். முதல் பிராகரத்தில் திருவாடுதுறை ஆதினத்துக்கான தனி இடமும் உள்ளது. அதையும் சிறு கோவில் போன்றே பராமரித்து வருகின்றனர்.

சுயம்புமூர்தியான சிவபெருமான் மாசிலாமணீஸ்வரர் மற்றும் கோமுக்தீஸ்வரர் என்றயிரு  பெயரிலும் அம்மன் ஒப்பிலாமுலைநாயகி என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

தலசிறப்பு

1.திருமாளிகைதேவர் மீது நரசிங்கன் போர்புரிய வந்ததால், அம்பிகை கோவில் மதில் மீதுயிருந்த அனைத்து நந்தி;தேவர்களையும் ஒன்றாக திரட்டி அனுப்பியதால், இக்கோவில் மதில் மீது நந்திதேவர்களின் உருவம்யிருப்பதில்லை.

2. நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது.

3. திருஞானசம்மந்தர் அவரின் அப்பா நடத்திய வேள்விக்காக சிவபெருமானிடமிருந்து ஆயிரம் பொற்காசுகளை பெற்ற தலம்.

4.முப்பது முக்கோடி தேவர்களுமிங்கு அரசமரமாக உள்ளனர். இந்த மரநிழலில், சிவபெருமான் திருநடனம் ஆடினார்.

பெரியநந்தி 

14 அடி 9 அங்குல உயரமானநந்தி உள்ளது. (ஆனால் பார்வையாகயில்லை. தஞ்ஜாவூர் கோவில் நந்தி 12 அடி உயரம். 

என்பார்வை

இந்த யாத்திரையில் நான் பல திருவாடுதுறை ஆதினங்களின் கோவிலை தரிசனம் செய்தோம். கோவில் பராமரிப்பு மற்றும் பணிசெய்பவர்களின் பணி அர்பணிப்பு திருப்திகரமாகயில்லை. மிகவும் வருத்தமுறசெய்தது. 

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.


























No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...