பாபநாசம் 108 சிவாலயம் (தரிசனம்-31.1.2026)
31 ஆம் தேதி காலை நாங்கள் நல்லிச்சேரியிலிருந்து புறப்பட்டு கும்பகோணம் வந்து அங்கு சில ஆலயங்களை வழிபட்டு புதுச்சேரியை அடையலாம் என்ற தீர்மானித்தோம். திருப்பாலைத்துறை பாலைவனநாதர் பற்றி கேள்வி பட்டு தரிசனம் செய்ய முடிவெடுத்தோம். பாபநாசம் 108 சிவாலயத்தை தரிசனம் செய்துவிட்டு, பாலைவனநாதர் கோவில் அர்சகர் வழிகாட்டுதலின்படி, நல்லூர், இன்னாம்பூர், திருபுறம்பியம், கொட்டையூர் போன்ற தலங்களை தரிசனம்செய்துவிட்டு சுபமாக புதுவையை அடைந்தோம்.
108 சிவாலயம்
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
பர்வதவர்தினி சமேத ராமலிங்கசுவாமி என்ற பெயரில் சிவபெருமான் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
ராமாயணத்தில் ராவணன் வதம்முடிந்து, ராமர், லெஷ்மணர், சீதை, ஆஞ்சநேயர் அவர்கள் அயோத்திக்கு சென்ற கொண்டிருந்தனர். சீதாதேவி அவர்களுடன் பிரம்மகத்தி பின் தொடர்வதாக ராமனிடம் தெரிவிக்கிறார். ராமரும், யுத்ததத்தில் நாம் செய்யத பல வதம்; காரணமாகயிருக்கலாம், என்று கூறி, மீண்டும் சிவ வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை செய்கின்றார். புhபநாசம் வழியாக சென்ற சமயம்யிந்த இடத்தை தேர்ந்தெடுத்து, 108 சிவலிங்கங்கள் செய்து வழிபட முடிவு செய்கின்றனர். சீதாதேவி ஆஞ்சனேயரை அழைத்து காசியிலிருந்து ஒரு சிவலிங்கம் கொண்டுவர சொல்கிறார். 107 லிங்கங்கங்களை ஆற்று மணலில்பிடித்து வழிபாடு செய்கின்றனர். ஆஞ்சநேயர் கொண்டுவந்த சிவலிங்கம் 108 வது லிங்கமாக தனிசன்னதியில் வழிபாட்டிற்காக உள்ளது. இந்த 108வது ஆஞ்சநேயலிங்கத்தை வழிபட்டு, பின்னர் அம்பிகையை வழிபட்டு இக்கோவில் வழிபாட்டை முடிக்க வேண்டும் என்பது நியதியாக உள்ளது. இக்கோவிலில் ராமர் லெஷ்மணர,; சீதை இவர்கள் ராமாயணகாலத்தில் பயணித்தயிடங்களை வரைபடமாக வெளியிட்டுள்ளனர். 107 சிவலிங்கங்களை வழிபட நபர் ஒருவருக்கு 10ரூ கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ராமர் சிவலிங்கததை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலமாதலால், ராமேஸ்வரத்திற்கு ஒப்பான தலமாக கருதப்படுகிறது. ராமலெஷ்மணர்களின் பாபத்தை தீர்தயிடமாதலால், இந்தயிடம் பாபநாசம் என்ற அழைக்கபடலாயிற்று.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.











No comments:
Post a Comment