குத்தாலம் ஸ்ரீசோழிஸ்வரர் (தரிசனம்-26.1.2026 -மாலை)
அமைவிடம்
மயிலாடுதுறையிலிருந்து 10கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.
சௌந்தரநாயகி மற்றும் பரிமளசுகந்தநாயகி சமேத ஸ்ரீசோழீஸ்வரர் திருக்கோவில் சுமார்1200 ஆண்டுகள் பழமையானது.
தலபுராணம்
பரத முனிவர் இந்த ஆலயத்தில் புத்திர வரம் வேண்டி யாகம் செய்து கொண்டிருந்த போது, ஒரு பெண்குழந்தையை இக்கோவில் கண்டார். அந்த குழந்தை ஓயாது அழுதுகொண்டேயிருந்தது. அவர் தூக்கியவுடன் அழுகையை நிறுத்தியது. பரதமுனி அந்த குழந்தையை மகளாக ஏற்று வளர்த்து வந்தார். பார்வதிதேவியே இந்த பெண் குழந்தை என்பதை உணர்ந்து இத்தலத்தில் இறைவனுக்கு நிச்சயித்து கைலாயத்தில் திருமணம் நடத்தியதாக புராணம் கூறுகிறது.
குத்தாலம் ஆதிகேசவ பெருமாள்.
மிகவும் பழமையான இந்த பெருமாள் கோவிலும் அருகிலே அமைந்திருந்ததால். இவரையும் தரிசனம் செய்தோம்.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊ ர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.





No comments:
Post a Comment