கஞ்சனூர்,அக்னீஸ்வரர்(தரிசனம்-27.1.2026-மாலை)
அமைவிடம்
தஞ்ஜாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து 20கி.மீ.
கோவில் சிறப்பு
1. நாவுக்கரசர் மற்றும் சுந்தரரரால் பாடப்பெற்ற தலம். காவிரி வடகரை தலம்.
2. மதுரை ஆதினத்திற்கு உட்பட்ட கோவில்.
3. சேக்கிழார் பாடியதலம்.
4. பிரம்மனுக்கு திருமண காட்சியளித்ததலம்.
5. நவகிரகத்தில் சுக்ரன் தலம்.
6. பராசர முனிவருக்கு முக்தி தருவதற்காக தாண்டவம் ஆடியயிடம்
7. மதுராபுரி மன்னன் கம்சராஜன் வழிபட்ட தலம்.
8. அக்னி பகவானுக்கு தோஷத்தால் ஏற்பட்ட சரும நோய், நீங்கியதலம். அக்னி இத்தலத்தில் வழிபட்டதால் இறைவன் அக்னீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.
9. மானகஞ்சார நாயனார் அவதரித்ததலம்.
10. கலிகாமநாயனார் திருமணம் நடைபெற்ற தலம்.
11. கஞ்சனூர் சப்தஸ்தானம் 1.கஞ்சனூர், 2. திருக்கோடிகாவல், 3. திருவாலங்காடு, 4. திருவாடுதுறை, 5. ஆடுதுறை, 6. திருமங்கலக்குடி, 7. திருமாந்துறை (தென்கரை மாந்துறை) என்ற ஏழூர்தலங்கள்.
12. தலவரலாறு.
13. அமுதம் பெருவதில் கோபமடைந்த அசுரர்கள் குலகுரு சுக்ராச்சாரியாரிடம் முறையிட தேவர்கள் நாடு நகரம்யிழந்து பூலோகத்தில் துன்புற சாபமிட்டார். வு pயாச முனிவர் உத்ரவாகிணி என்று அழைக்கப்படும் வடகாவரியில் நீராடி இத்தல இறைவனை வழிபட்டு சாபம் நீங்க பெற்றனர் தேவர்கள்.
14. திருவாடுதுறை போன்றே இக்கோவிலும் பராமரிப்பு சரியாகயில்லை. மக்களும் சிபெருமானை விட்டு நவகிரகங்களையே வணங்குவது சற்று வருத்தமளிக்கிறது.
நாங்கள் கஞ்சனூர் கோவில்லிருந்து மயிலாடுதுறை திரும்பினோம். வழிபாட்டிற்கான நேரம்யிருந்ததன் காரணமாக ஸ்ரீஉக்தவேதீஸ்வரரை மீண்டும் வழிபட்டோம். (ஸ்ரீஉக்தவேதீஸ்வரர் வலைப்பதிவுள்ளது)
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊ ர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.

















No comments:
Post a Comment