திருவலாம்பொழில்

 திருவலாம்பொழில் (தரிசனநாள்-26.1.2026-காலை)

அமைவிடம்

தஞ்ஜாவூர்  மாவட்டம், தஞ்சாவூர்-திருவையாறு சாலையில் திருகண்டியூர் சென்று, அங்கிருந்து, திருப்பூந்துருத்தி வழியாக 4 கி.மீ. தொலைவில் உள்ளது. 

வரவாறு

அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசரால் பதிகம் பாடப்பெற்ற தலம். இத்தல இறைவன் “தென்பரம்பைக்குடியின்மேய  திருவாலம்பொழிலானைசிந்தி நெஞ்சே” (அப்பர் திருதாண்டகம்) ஊர் பெயர் தென் பரமக்குடி என்றும், இறைவன் பெயர் திருவாலம்பொழில்உடையநாதர் என்பதை இவ்வரிகள் மூலம் அறிய முடிகிறது. 

ஞானாம்பிகை சமேத ஆத்மநாதேஸ்வரர் (எ)  வடமூலேஸ்வரர் என்ற திருநாமங்களில் அம்மையும் அப்பனும் அருள்பாலிக்கின்றனர். அஷ்டவசுக்கள் இத்தல இறைவனை வழிபட்டு சாமவிமோசனம் பெற்றனர் என்பது புராணம். 

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவரத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருத்தலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள். கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களிள் உள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானிதுள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.











No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...