திருக்குருகாவூர் வெள்ளடைநாதர்

 திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் (தரிசனநாள்.28.1.2026- காலை)

அமைவிடம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது.

ஞானசம்மந்தர் மற்றும் சுந்தரரால் பாடப்பெற்ற தலம். காவிரி வடகரையின் 13வது தலம்.

நீலோத்பவ  காவியங்கண்ணி, விசாலாட்சி என்ற பெயரில் அம்பிகையும் ,சுவேதரிஷபேஸ்வரர், வெள்ளடையீஸ்வரர், வெள்ளடைநாதர் என்ற பெயர்களில் இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பொதிசோறு விழா

பசியுடன் வந்த சுந்தரருக்கும் அவரது அடியவர்களுக்கும், ஈசனே மனித உருவில் வந்து, உணவு கொடுத்ததை பொதி சோறு விழா என்று கொண்டாடுகிறார்கள். திருபைஞ்சீலி என்றயிடத்தில், நாவுக்கரசருக்கு இவ்வாறே இறைவன் மனித உருவில்வந்து உணவு கொடுத்தார். அNதுபோல் அங்கேயும் பொதி சோறு விழா நடைபெறுகிறது. அன்னதானம் இதுதான் பொதிசோறு விழா என்று கூறுகின்றனர்.

நாங்கள் தரிசனத்திறக்கு சென்ற போது கோவில் கதவு அடைத்திருந்தது. கோவில் அருகில் குடியிருந்தவர் தரிசனத்திறக்கு உதவினார். ஆனால் அவர் சற்று மனநிலைசரியில்லாதவர் போன்று காணப்பட்டார். அவர்தான் அர்சகரா என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், இக்கோவிலில் பெருமானுக்கு பூகூடயில்லை. கற்பூரம்யில்லை நாங்கள் விளக்கு திரி பயன்படுத்தி தீபாராதனை செய்ய சொன்னோம். சொன்னதை செய்யும் கிளிபிள்ளையாகயிருந்தார் அவர். மனது சற்று கனத்துடன் திரும்பினோம். 

இந்த ஊரில் நெட்வொர்க் சரியில்லாமல், எங்களை மிகவும் சுற்ற வைத்தது வரைபடம். நாங்கள் எப்படியோ மிகுந்த சிரமத்துடன்; (வழி கேட்க மனிதர்கள்கூடயில்லை) மயாவரத்தை அடைந்தோம். இன்றும் காலைஉணவுகிடைக்காமல், 12.30 மணிக்கு மாயவரத்தில் மதியஉணவு சாப்பிட்டோம்.

இரண்டு மணிநேரம் ஓவ்வெடுத்து மாலை மீண்டும் தரிசனததிற்காக பயணத்தை தொடந்தோம்.

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.


















No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...