திருகோலக்கா தாளபுரீஸ்வரர் (தரிசனம்-28.1.2026-காலை)
அமைவிடம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோவலிலிருந்து 1.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
காவிரி வடகரை தலங்களில் 15வது தலம். ஓசைகொடுத்த நாயகி சமேத சப்தபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கன்றனர். இத்தலத்தில் ஞானசம்மந்தர் பாடியசமயம் அவருக்கு பொற்தாளம் கொடுத்தார் இறைவன். ஞானசம்மந்ரர் மற்றும் சுந்தரமூர்திநாயனாரால் பாடப்பெற்ற தலம்.
கோவில் சிறப்புகள்
சோழர்காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட இந்தகோவில் நகரத்தார்களால் கற்றலியாக மாற்றப்பட்டது. ஈசனுக்கும் அம்பிகைக்கும் தனிதனியாக கோவில் அமைப்புள்ளது. ஆனால் நுழைவாயில் ஒன்றுதான். கோவில் திருக்குளமானது. சூரியபகவானால் உண்டாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் அனைத்தும் மிக அற்புதமாக நடை பெற்றது. கோவில் அசர்சகர்இ அலங்காரம் செய்ய ஒரு மணிநேரம் ஆகும்இ தீபாராதனை காட்டிவிடுகிறேன் என்றார். ஆனால் நாங்கள் வழிபாட்டிற்காகதான் வந்துள்ளோம்இ ஒருமணிநேரம் ஆனாலும் காத்திருந்துஇ தரிசனம் செய்கிறோம் என்று சொல்லிஇ ஒன்றரை மணிநேரம் அம்மன் சன்னதியில் அமர்ந்திருந்தோம். நான் மூன்றூண்டுகளுக்கு பிறகு “அபிராமிஅந்தாதி” 100சுலோகங்களையும் பாடி மனநிறைவுபெற்றேன்.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊ ர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.





No comments:
Post a Comment