செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர்

 செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர். (தரிசனம்-25-1.2026)

அமைவிடம்

செந்தலை என்ற இந்த ஊர், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி – கண்டியூர் சாலையில், குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

கந்தர்வபெண் சந்திரலேகை இந்ததல சிவனை பூஜித்ததால் இந்த ஊர் சந்திரலேகை என்ற அழைக்கப்பட்டது. பின்னர் செந்தலையாக மரு வியது. 

கோவில் அமைப்பு

சுவாமி அம்மன் சன்னதி, கோடிமரம் பலிபீடத்துடன் பெரிய ஆறுநிலை கோபுத்துடன் காட்சி தருகிறது. பஞ்முக சிவபெருமான் சிலையிருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகி கொண்டிருந்தது. அநேகமாக பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

சுயம்மூர்த்தியான இந்த சிவன் ஆலயத்தில், விநாயகர் முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்கை என்ற பிற சன்னதிகள் அமைந்துள்ளன.  

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் (வரகூர் கோவில் பிளாக் உள்ளது) வரகூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்கலுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு   தரிசனம் செய்ய தீர்மானிதுள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.










 





No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...