திருசெங்காட்டன்குடி உத்ராபதீஸ்வரர்

 திருசெங்காட்டன்குடி (தரிசனம்-29.1.2026-மாலை)

அமைவிடம்.

நாகப்பட்டினம் மாவட்டம், திருவாரூரிலிருந்து திருகண்ணபுரம் மற்றும் திருமருகல் வழிதடத்தில் செல்ல வேண்டும். 

தலபுராணம்

கயமுகாசுரனை விநாயகர் அழித்தன் காரணமாக, அந்த பாவம் தீர இத்தல இறைவனை வழிபட்டார். கணபதிவழிபட்டதால் கணபதீசரம் என்று இக்கோவில் பெயர்பெற்றது. அசுரனின் உடல் ரத்தம், கணபதிக்கு உடல் முழுவதும் பட்டுயிந்தயிடம் செங்காடாகமாறியது.. இதன் காரணமாக செங்காட்டான்குடி என்ற பெயர் பெற்றதுயிந்தவூர்.

சிறுத்தொண்டநாயனார்.

இவர் இயற்பெயர் பரஞ்சோதியார். இவர் கல்வியிலும் வீரத்திலும் சிறப்புற்று விளங்கினார்.  ஆயர்வேதத்தில் தேர்ந்தவர். பல்லவமன்னின் தளபதியாகவிளங்கியவர.;  சாளுக்கிய மன்னரை தோற்கடித்து வாதாபியிலிருந்து விநாயகரை கொண்டு வந்துயிக்கோவிலில் பிரதிஷ்டை செய்தார். (வாதாபி கணபதி)  பணம், புகழ், வீரம்யிருந்தும், சிவவழிபாட்டையே முக்கியமாக கருதினார். இவரின் எண்ணத்தை அறிந்த கொண்ட பல்லவ மன்னன்யிவருக்கு சிவ தொண்டுபுரிய மிகவும் உதவியாகயிருந்தார். பதவியை துறந்துவிட்டு மனைவியுடன் சிவத்தொண்டு புரிந்துவந்தார். சிவபெருமான் பைரவ வேடத்தில் வந்து பிள்ளைக்கறி கேட்டயிடதானிந்த திருசெங்காட்டான்குடி.

பிள்ளைகறி வரலாறு 

சிறுதொண்டர் சிவனடியார்களை போற்றி அவர்களுக்கு உணவு அளித்தபின்னரே உணவருந்திவந்தார். பைரவர் கோலத்தில் சிவபெருமான் இவரிடம் வந்து நான் ஆறுமாததிற்;கு ஒருமுறைதான் உணவருந்துவேன், அதுவும் 5வயது மட்டுமே நரம்பிய பாலகனை, பெற்றோருக்கு ஒரே மகனாகயிருக்கும், உடலில் எந்த குறையும்மில்லாத சிறுவனை அவனின் தாய் மனதார சமைந்து எனக்கு பரிமாற வேண்டும் என்று கேட்டார். இது உன்னால் முடியாது என்று அந்தபைரவர் கூறவும.; முடியும் என்று சிறுதொண்டர் சொல்லி, அவர்களின் ஒரே மகனான சீறாளனை  சமைத்து விருந்து பரிமாறினர். சிவபெருமான் தலைகறி எனக்கு பிடிக்கும் எங்கே என்று வினவினார். உடனே சீறாளனின் தாய் தலையை பக்குவப்படுத்தி கொண்டு வந்தாள். சிவபெருமான் சோதனையில் எல்லைக்கே சென்று, நான் சிவனடியாருக்கு கொடுத்து விட்டுதான் சாப்பிடுவேன் போய் அடியவரை கூட்டிவா என்றார். ஆடியார் யாரும் கிடைக்கவில்லை என்றதும் நீ முதலில் உட்கார்ந்து உணவருந்து என்று கூறுகிறார், பைரவராக வந்த சிவபெருமான். உடனே சிறுதொண்டர் உணவை எடுத்து வாயில் வைக்க, தடுத்து உன்மகனை கூப்பிடு என்று கூறினார். அவன் இனிவுதவான், என்றனர். ஆனால் பைரவ வேடத்தில் வந்த சிவபெருமான், கூப்பிடு உன்மகனை என்ற உடன் அவர்கள் வாசலுக்கு சென்று சீறாளா, சீறாளா என்று அழைத்தனர். பாடசாலையிலிருந்து வரும் பாலகனாக வந்தான் சீறாளன்.  சோமாஸ்கந்தராக காட்சியளித்தார்.

எல்லப்பநாவலர்

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருசெங்காட்டான்குடிபுராணம் என்று இக்கோவில் இறைவனைபற்றி எழுதியுள்ளார்.

சிவபெருமான் அடியவருக்காக நடந்துவந்ததலங்கள்.

இறைவன் உத்ராபதீஸ்வரராக தோன்றி, சிறுதொண்டுநாயனார் வீடுவரை வந்து பிள்ளைகறி உண்டதானயிடம். சிவபெருமான் பாதம் பட்டு நடந்துவந்த பிற தலங்கள். சிதம்பரம், திருஆலவாய், திருவாரூர், திருகச்சூர், திருக்குருகாவூர், திருஅம்பர்மாகாளம், திருமறைக்காடு, திருவாய்மூர், திபைஞ்சீலி, திருப்பெருந்துறை, திருசாய்க்காடு, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர். 

ஐயடிகள் காடவர்கோன்நாயனார்

பல்லவ மன்னன். சிவதொண்டில் ஈடுபட்டயிருந்தவர், இத்தல  உத்திராபதியார் திருமேனியை உருவாக்கியவர். சிவதொண்டில் ஆர்வம்கொண்டு மன்னர் பதவியை துறந்து, பல திருதலங்களுக்கு சென்று இளையருள்பெற்ற நாயனார் ஆனார்.

உத்திராபதியார் உருவானகதை.

ஐயடிகள் காடவர்கோன் என்ற பல்லவ மன்னன், சிறுதொண்டு நாயனாரின் வரலாற்றை கேட்டு, இத்தலத்திலேயே தங்கி இறைவழிபாடு செய்யலானார். உத்திராபதியாரின் தோற்றத்தை கான மிகவும் ஆவலுற்றதர். ஊத்திராபதியார் திருவுருவம் அமைத்து சித்திரை திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில் யாம்செண்பக பூ மனம்வீச காட்சிதருவோம் என்று அருளினார். கொல்லர்கள் உத்திராபதியார் உருவம் செய்ய பல இடர்பாடுகளை சந்தித்தனர். கும்பாபிஷேக தேதிவேறு நெருங்கி கொண்டிருந்தது. மிகுந்த கவலையில் மன்னன்யிருந்தான். சிவனடியார் இவர்களிடம்வந்து தண்ணீர் கேட்டார். கொல்லர்கள் நீரில்லை காய்சிய மஐதான் உள்ளது என்றனர். அவர் அதைவாங்கி குடித்து உத்ராபதிசிலையாக காட்சி கொடுத்தார். இதை கேள்வியுற்ற மன்னன். விய்ந்துபோனான். இந்தசிலையை கோவிலில் வைத்து குடமுழுக்கு செய்துவித்தான். இறைவனும் ஐயடிகள் காடவர்கோனுக்கு சாட்சி அளித்தார். 

கூடுதல் தகவல்

கோணேரிராஜபுரம் நடராஜரின் வரலாறும், இதேதான். இதே வரலாறை ஒத்த நடராஜர் கோவில், திருநெல்வேலியருகில் உள்ளது. நாங்கள் தரிசனத்திற்காக காத்துகொண்டிருக்கிறோம். செப்பேறை, 

ஞானசம்மந்தராலும், அப்பராலும் பாடப்பெற்ற தேவாரதிருத்தலம்.

எங்கள் அனுபவம்

நாங்கள் தரிசனத்திற்காக சென்ற போது மிகவுமயிருட்டி விட்டது. கோவிலில் வெளிச்சம் மிக குறைவாகத்தான்ணிருந்தது. மிகவும் அழிநிலையில்யிருந்தது, இந்தகோவில். ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்தான்யிது. சிறுதொண்டநாயநாரின் மாளிகை தற்சமயம் கோவிலாக மாறியுள்ளது. நாங்கள் இருட்டு காரணமாக தரிசனம் செய்யவில்லை. மிக சிறிய ஊர். மக்கள் நடமாட்டமும்யில்லை. அர்சகர்யிருந்தது சற்று ஆறுதலாகயிருந்தது.

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.





















No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...