தாமல் வராகீஸ்வரர் (தரிசனநாள்- 1.1.2026)
அமைவிடம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னை வேலூர் நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் என்றயிடதிலிருந்து, 3கி.மீ. தொலைவில்; அமைந்துள்ளது இந்த தாமல்.
தொன்மை
கி.மு 500 ஆண்டுகளுக்கு முன்புள்ளது என்று அறியப்படுகிறது. காஞ்சிபுராணத்தில், காஞ்சிபுர கோவில்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாறு
இரணியாட்சகன் என்ற அசுரன் பூமியையே பாதளத்தில் ஒளித்துவைத்தான். இறைவன் பெருமாள் வராக(பன்றி) உருவம் கொண்டு, பூமியை காத்தார். இவருக்கும் அவர்செயல் காரணமாக செருக்கு ஏற்பட்டது. சிவபெருமான் வேடன் வடிவம் கொண்டு செருக்கை அழித்து வராகத்தின் கொம்பை மார்பில் அணிகலனாக அணிந்து கொண்டார். பெருமாள் அவரின் தவறை உணர்ந்து, காஞ்சி தலமான இங்குவந்து, இறைவனை வேண்டிநின்றார் என்பNது இத்தல வரலாறு.
பயண அனுபவம்
ஆங்கில புத்தாண்டு அன்று நாங்கள் புதுச்சேரியிலிருந்து, பெங்களுரு பயணித்தோம். 1.அனந்தமங்கலம் 2. தாமல் தாதோதரபெருமாள், 3. தாமல் வராகீஸ்வரர் என்ற சிவன் கோவில் என்று மூன்று ஆலயங்களை வழிபட்டு சென்றோம்.











No comments:
Post a Comment