கொருக்கை வீரட்டானம்

 கொருக்கை வீரட்டானம் (தரிசனம்-28.1.2026-மாலை)

அமைவிடம்

மயிலாடுதுறை மாவட்டம் கொருக்கை என்ற கிராமத்

தில் அமைந்துள்ளது.

கோவில் தகவல்கள்

1. அப்பரால் தேவாரம் பாடப்பெற்ற தலம். 

2. எட்டு வீரட்டத்தலங்களில். ஈசன் மன்மதனை எரித்ததலம்.

3. தேவாரதிருத்தலத்தில் காவிரி வட கரை 26வது சிவத்தலம்.

4. ஞானாம்பிகை சமேத வீரட்டேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கின்றனர்.

5. திருமால், தேவர்கள், இலக்குமி ஆகியோர் வழிபட்டதலம். 

6. கோவில் எதிரில் அமைந்துள்ள குளம் திரிசூலதீர்தம் என்று அழைக்கப்படுகிறது.

கோவில் புராணம்.

அசுரர்கள் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர் இதன் காரணமாக தேவர்கள் சிவபெருமானை வழிபட்டனர். சிவபெருமான் முருகப்பெருமான் வந்து உங்களை அசுரனிடமிருந்து காப்பார் என்று கூறி நிஷ்டையில் அமர்ந்தார். முருகப்பெருமான் வரவை எதிர்கொண்ட தேவர்கள், அவரின் வரவுக்காக பொறுமை கொண்டு காத்திராமல். மன்மதனை துணைக்கழைத்தனர் .மன்மதனை பாணம் கொண்டு சிவனின் நிஷ்டையை கலைக்க முற்பட்டனர். மன்மதன் நிராகரித்ததால், மன்னதனை அழிக்கமுற்பட்டனர். மன்னதன் தேவர்கள் கையால் அழிவதை விட ஈசன்மூலம் கிடைக்கும் மரணத்தை எதிர்கொண்டான். நிஷ்டையை கலைத்த மன்னமதனை ஈசன் நெற்றிக்கண்ணால் எரித்தார். ரதி கணவின் உயிர்வேண்டி வணங்கிட. ரதிகண்ணுக்கு மட்டும் மன்மதன் தெரியும் வண்ணம் அருள்புரிந்தார். 

பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.























No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...